தமிழ் சினிமாவில் இன்று புகழின் உச்சத்தில் இருக்கிறார் நடிகர் விஜய், தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.
தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது அவரை ஹீரோவாக்கி தொடர்ந்து படங்கள் இயக்கியும் தயாரித்தும் சப்போர்ட் செய்தார். அதனால் அவர் தன்னுடைய இயக்குனர் பணியைத் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கும் ஆளானார்.

VIjay and ajith in Raajavin paaravaiyile
அதே போல விஜய்யின் வெற்றிக்கு இன்னொரு காரணம் எம் ஜி ஆர்- சிவாஜி, ரஜினி –கமல் போல விஜய்- அஜித் என்ற இருமையை உருவாக்கியதும் ஒரு காரணம். அப்போது இருவரும் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்த திட்டமிட்டோ திட்டமிடாமலோ அப்படி ஒரு ஒப்பீடு உருவாகிவிட்டது. அதை இருவருமே சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஒரு காலகட்டத்தில் தங்கள் படங்களிலேயே ஒருவரை ஒருவர் தாக்கி மறைமுக வசனங்கள் பேசி சீண்டிக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பக்குவம் பெற்று அதை நிறுத்தினர். ஆனால் அவர்கள் தொடங்கி வைத்த இந்த மோதல் அவர்களின் ரசிகர்களிடம் இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

Valaipechu Bismi
இது சம்மந்தமான ஒரு சம்பவத்தைதான் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் “ஒரு காலகட்டத்தில் விஜய்யும் அஜித்தும் போட்டியாளர்களாக வளர்ந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது பத்திரிக்கைகளில் அஜித்- விஜய் என்று எழுதினால், விஜய்யே நேரடியாக போன் செய்து ‘ஏன் அஜித் விஜய் என்று எழுதுகிறீர்கள்’ விஜய்- அஜித் என்று எழுதுங்கள் என்பார். அவருக்கு என்னவென்றால் எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி –கமல் வரிசையில் விஜய்-அஜித் என்று வந்து தான் ரஜினிக்கு அடுத்தது என்று வரவேண்டும் என ஆசைப்பட்டார்.” எனக் கூறியுள்ளார்.
