பட வாய்ப்புக்காக கவர்ச்சியை கையில் எடுத்த ரஜினியின் ரீல் மகள் சாய் தன்ஷிகா.. லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்..!

By Nanthini on ஐப்பசி 7, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் அறிமுகமானதிலிருந்து தனக்கென உரிய பாணியில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சாய் தன்ஷிகா. தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கினார். குறிப்பிட்ட இடைவெளியில் படங்களில் நடித்து வருகின்றார். நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த அளவே வருகின்றன.

   

இருந்தாலும் கதைக்கு ஏற்றபடி நல்ல கோல்டான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் முதன்முதலில் மனதோடு மழைக்காலம் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

   

 

ஆனால் அந்த கதாபாத்திரம் அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த பேராண்மை திரைப்படத்தில் நடித்த முடித்தார். அந்தத் திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. அந்தப் படத்தில் வெற்றியை தொடர்ந்து அரவான் மற்றும் பரதேசி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார்.

குறிப்பாக பரதேசி திரைப்படத்தில் இவருக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்திருந்த நிலையில் அந்த கேரக்டரில் அனைவரும் மிரண்டு போகும் அளவுக்கு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து கபாலி திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார்.

அதில் டாம் பாய் லுக்கில் மிகவும் போல்டான பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பிறகு மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே மற்றும் விழித்திரு போன்ற திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.

நல்ல கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்த போதும் பட வாய்ப்புகள் இல்லாததால் கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கே இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு ஆள் காணாமல் போய்விட்டார். இருந்தாலும் அடிக்கடி சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவ்வாறு பட வாய்ப்புக்காக மற்ற நடிகைகளை போல கிளாமர் ரூட்டுக்கு மாறி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.