தமிழ் சினிமா உலகில் டிஸ்கோ சாந்தியை தெரியாதவர்கள் யாருமே இருந்திருக்க முடியாது. இவருடைய உண்மையான பெயர் சாந்தகுமாரி. இவர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் பாடல்களுக்கு நடனமாடும் மங்கையாகவும் தான் திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். கடந்த 1985 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தும் நடனமாடியும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த இவர் சிறீஹரி என்பவரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் 2013 ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். தற்போது தன்னுடைய குடும்பத்தையும் பிள்ளைகளையும் டிஸ்கோ சாந்தி தான் பார்த்துக் கொண்டு வருகின்றார். இந்த நிலையில் டிஸ்கோ சாந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய வாழ்க்கை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் சினிமாவை விட்டு ஒதுங்கிய பிறகு பல இயக்குனர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு மீண்டும் சினிமாவில் நடிக்க விருப்பமில்லை.

திருமணத்திற்கு பிறகு, கணவருக்கு சாப்பாடு தருவது, வீட்டில் சமைப்பது, பிள்ளைகளை பார்த்துக் கொள்வது என நேரம் சரியாக போய்விட்டது. என் கணவர் கூட மீண்டும் நீ சினிமாவில் நடிக்கலாமே என்று கூறிய போது கூட நான் வேண்டாம் என்று தவிர்த்து விட்டேன். அது மட்டுமல்லாமல் சுமார் ஏழு வருடமாக வீட்டை விட்டு வெளியேறாமல் நான் வீட்டிற்குள்ளே தான் இருக்கிறேன். எனக்கு அப்போதும் சரி இப்போதும் சரி, நண்பர்கள் வெளியில் கிடையாது. என் பிள்ளைகள் கூட என்னிடம் கேட்பார்கள் ஏமா நீ வெளியில போகவே மாற்ற வா என்று கெஞ்சி கேட்பாங்க. ஆனா எனக்கு வெளியில் செல்ல அவ்வளவு விருப்பம் கிடையாது. ஏதாவது வேண்டுமென்றால் கடைக்கு மட்டும் சென்று வருவேன். மற்றபடி நான் ஏழு வருடமாக எங்கேயும் செல்லாமல் வீட்டிற்குள்ளே தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
