அழகுக்கும் புகழுக்கும் பெயர் போன நடிகை வெண்ணிறாடை நிர்மலா.. இதுவரை திருமணம் செய்து கொள்ளாத காரணம் என்ன தெரியுமா..??

By Nanthini on ஐப்பசி 6, 2024

Spread the love

தமிழ் சினிமா உலகில் 60 மற்றும் 70 காலகட்டத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா. 1965 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தினால் தான் இவருடைய பெயர் வெண்ணிற ஆடை நிர்மலா என்று மாறியது. இவர் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சினிமாவில் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

   

இவர் நடிகை மட்டுமல்லாமல் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. பல மேடைகளில் இவர் நடனமாடியுள்ளார். இடையில் சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்ட இவர் சின்னத்திரை நோக்கி பயணித்தார். தமிழ் சின்னத்திரையில் தெய்வமகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இப்படி சினிமா உலகிலும் சின்னத்திரையிலும் சாதித்த இவர் திருமணம் செய்து கொள்ளாமல் சிந்துலாகவே இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் திருமணம் செய்து கொள்ளாத காரணம் குறித்து சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். அதில், திருமணம் வேண்டாம் என்று நான் முடிவு செய்ததற்கு என்னுடைய அப்பா அம்மாதான் முக்கிய காரணம்.

   

 

ஏனென்றால் என் அம்மா அவ்வளவு அழகாக இருப்பார்கள். ஆனால் எங்க அப்பா நான் நினைத்து கூட பார்க்காத அளவுக்கு என் அம்மா மேல சந்தேகப்படுவார். எனக்கும் இப்படி ஒரு கணவர் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் வேகமாக நடந்தால் வேகமாக நடக்காதே கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டால் உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட வார்த்தைகள் எல்லாம் கேட்டு கேட்டு எனக்கு சலித்து போய்விட்டது. ஒரு கட்டத்தில் என்னை யாருமே கடிக்க வேண்டாம் நான் இப்படியே இருந்து கொள்கிறேன் என்று முடிவு செய்து தான் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன் என அவர் கூறியுள்ளார்.