தளபதி விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. நடிகர் தாடி பாலாஜிக்கு TVK கட்சியில் பொறுப்பா..? அவரே சொன்ன தகவல்..!!

By admin on ஐப்பசி 6, 2024

Spread the love

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் முதல் மாநாடு இந்த மாதம் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு வந்த கால் நடும் விழா பூஜையுடன் சிறப்பாக நடந்தது. அந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்றார். மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்றனர்.

   

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் நண்பரும், நடிகருமான தாடி பாலாஜி தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் கோவிலுக்கு சென்று பூஜை செய்துள்ளார். அவர் கூறியதாவது, நேற்று மாநாட்டுக்கு பூமி பூஜை போடப்பட்ட நிலையில் இன்று விஜய்க்காகவும் பொடிக்காகவும் பூஜை போட்டிருக்கிறோம். அவரின் நண்பர் என்ற முறையில் பூஜையில் நான் பங்கேற்றதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

   

 

3 நாளைக்கு முன் ஒரு குட் நியூஸ் சொல்வதாக சொல்லியிருந்தேன். அதைப்பற்றி இப்போது கூறுகிறேன். கடந்த வாரம் புஸ்ஸி ஆனந்த் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வருமாறு சொன்னார். அவரின் அழைப்பை ஏற்று நான் அங்கு சென்றேன். அப்போது அங்கு எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நடிகரும் என் நண்பருமான விஜய் என்னை மாநாட்டுக்கு வேலை செய்யுமாறு சொன்னதாக புஸ்ஸி ஆனந்த் என்னிடம் கூறினார். இதை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்வேன். ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவரை வரவேற்க வேண்டும். என்ன பேச போகிறார் என்ன செய்யப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாத போது அவர்களாகவே ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றனர். அதுவே வெற்றிதான். அனைவரும் தலைவர் விஜய் பற்றி பேசுகிறார்கள். அவர் அமைதியா சென்று கொண்டிருக்கிறார். அனைத்திற்கும் பதில் 2026 ஆம் ஆண்டில் தெரியும் என அந்த பேட்டியில் தாடி பாலாஜி கூறியிருந்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by NewsTamil 24×7 (@newstamiltv24x7)