“மும்பையில பிறந்தாலும், நான் எப்போதும் தமிழ் பொண்ணுதான்”.. ஹன்சிகா வெளியிட்ட வீடியோவை பார்த்து வியந்த ரசிகர்கள்..!

By Nanthini on ஐப்பசி 6, 2024

Spread the love

மும்பையில் பிறந்து வளர்ந்த ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு தெலுங்கில் பல திரைப்படங்களில் லீட் ரோல்களில் நடித்த இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தமிழில் அவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதேசமயம் ஹன்சிகா மோத்வானியின் அழகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப் போனது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்க பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் எப்போதும் காதல் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.

   

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் தன்னுடைய சிறுவயது நண்பர் சோஹெல் கஸ்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா இறுதியாக மகா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

   

 

தற்போது ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மும்பையில் பிறந்தாலும் மனசுல எப்போதும் நான் தமிழ் பொண்ணுதான், நம்ம ஊரு சாப்பாடு என்று கேப்ஷன் போட்டு தோசை சாப்பிட்டு காபி குடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)