தளபதி விஜய் நடிப்பில் உருவான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அடுத்ததாக தளபதி தனது 69-ஆவது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்திற்கு பிறகு விஜய் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என முடிவெடுத்தார்.

முழு நேரமாக அவர் அரசியலில் ஈடுபட போகிறார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் தொடங்கிவிட்டார். தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று தான் அந்த மாநாட்டு பணிகளும் விமர்சையாக தொடங்கியது.

இந்த நிலையில் தளபதியின் 69 ஆவது திரைப்படத்தை பிரபல கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த நிறுவனம் யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்சிக் திரைப்படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறது.

தளபதி விஜயின் 69 ஆவது படத்தை ஹச் வினோத் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். பிரபல வில்லன் நடிகரான பாபி தியோல் தளபதியின் 69 ஆவது படத்தில் நடிக்கிறார்.

மேலும் பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரபல நடிகரான நரேன் ஆகியோரும் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளனர். இதில் பூஜா கிட்ட ஏற்கனவே பீஸ்ட் படத்தில் தளபதியுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் தளபதி 69 படத்தின் பூஜை நல்லபடியாக நடந்து முடிந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. பூஜையில் வேஷ்டி சட்டையில் விஜய் மாஸாக கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

#image_title
