உடலில் தேவையற்ற கொழுப்பை கரைக்க என்ன செய்யலாம்…? சிறந்த வழிமுறைகள் இதோ…

By admin on ஐப்பசி 4, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கின்ற பிரச்சனை உடல் பருமன். உடல் பருமனுக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தான். உடல் எடையை குறைக்க தேவையற்ற கொழுப்பை கரைப்பதற்கு பலர் ஜிம்முக்கு செல்கிறார்கள். கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்கலாம். அதை பற்றி இனி காண்போம்.

   

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு வாழ்க்கை முறை பழக்கங்களை முதலில் சரியாக கடைபிடிக்க வேண்டும். தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஒரே நேரத்தில் தூங்கி எழும்ப வேண்டும். காலையில் எழுந்தவுடன் டீ காபிக்கு பதிலாக தண்ணீர் குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை குடிப்பது கலோரிகளை எரிக்க உதவும். இது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறவும் உதவி செய்கிறது.

   

பொறித்த உணவுகளை தவிர்ப்பது உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும். காலை உணவில் புரத சத்து நிறைந்த உணவுகளான முட்டை, தயிர் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறைய வழிவகுக்கும்.

 

டீ காபிக்கு பதிலாக கிரீன் டீ, இலவங்கப்பட்டை டீ, சீரக தண்ணீர், ஓம தேநீர் போன்ற மூலிகை தேநீர் வகைகளை உட்கொள்ளலாம். இது உடல் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது. நாம் ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ளும் காலை மதிய இரவு உணவுகளில் புரதச்சத்து, மினரல்ஸ், வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இதன்மூலம் கெட்ட கொழுப்பு சேருவதை தவிர்த்து தொப்பை கொழுப்பையும் கரைக்கிறது.

தினமும் 7:00 மணிக்குள் இரவு உணவை உட்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு சாப்பிடக்கூடாது. தூங்குவதற்கும் இரவு உணவிற்கும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மன அழுத்தத்திற்கும் உடல் பருமனுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது என்று கூறுகின்றனர். இதனால் சில சமயங்களில் பசி அதிகமாகி ஆரோக்கியமற்ற உணவை சாப்பிட தூண்டுகிறது. அதனால் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமாகவும் இருக்கவும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும் உடல் செயல்பாடுகள் மிக அவசியம். தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும். இல்லையென்றால் குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும். எந்த ஒரு பழக்கவழக்கம் ஆனாலும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். நம் வாழ்க்கை முறையை மாற்றினாலே ஆரோக்கியமான வாழ்வை பெறுவது எளிதான காரியம் தான்.