தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே. அதன்படி பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில் நடித்த சந்தியாவை யாரும் மறந்திருக்க முடியாது. முதல் திரைப்படமே இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சந்தியா நடித்திருந்தாலும் காதல் திரைப்படம் அளவுக்கு எந்த திரைப்படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்துக் கொண்டிருந்த சந்தியா சென்னையில் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவரை குருவாயூர் கோயிலில் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

2016ஆம் ஆண்டு இவர்களுடைய திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற இருந்த நிலையில் அப்போது வெள்ளத்தால் சென்னை பாதிக்கப்பட்டிருந்ததால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வைத்திருந்த பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு சந்தியா கொடுத்துவிட்டார். இதனை தொடர்ந்து இந்த தம்பதிகளுக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த சந்தியா துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார்.

அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் சந்தியா நடித்திருந்தார். தற்போது அவரது படங்களில் பார்ப்பது என்பது அரிதாகத்தான் உள்ளது. இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சந்தியா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இத்தனை வருடம் ஆகியும் சந்தியா அப்படியே பழையபடி இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இப்போதும் அவர் ஹீரோயினாக நடிக்கலாம் மீண்டும் நிறைய படங்களில் உங்களை பார்க்க ஆர்வமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். நல்ல நடிப்பு இருந்தாலும் நேரம் மற்றும் கால சூழ்நிலையால் சந்தியாவால் சினிமாவில் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது அவரின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

