அட்டகத்தி தினேஷ் லைன் அப்பில் இருக்கும் படங்கள்.. கெத்து அண்ணனை கைல பிடிக்க முடியாது போலயே..!!

By admin on புரட்டாதி 27, 2024

Spread the love

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தினேஷ் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக சன் டிவியில் ஒளிபரப்பான பெண் சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தனது திரைப்படத்தை தொடங்கினார். அந்த சீரியலில் நடிகை சீதாவின் மகனாக நடித்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலிலும் அட்டகத்தி தினேஷ் நடித்தார். குக்கூ திரைப்படத்தில் பார்வையற்றவராக நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

   

விசாரணை திரைப்படத்திலும் அவரது நடிப்பு அற்புதமாக இருக்கும். இதனை தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, உள்குத்து, அண்ணனுக்கு ஜே, களவாணி மாப்பிள்ளை, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த படங்கள் வெற்றி பெறவில்லை. கடந்த வாரம் தினேஷ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

   

 

ஊர் மக்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் வீரராக கெத்து கதாபாத்திரத்தில் நடித்து அட்டகத்தி தினேஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்ததாக இயக்குனர் ஆதியன் அதிரை இயக்கத்தில் உருவான தண்டகாரண்யம் திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜேஷின் அசிஸ்டன்ட் முரளி கிருஷ்ணன் இயக்கும் கருப்பு பல்சர் என்ற திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க உள்ளார்.

லப்பர் பந்து' ட்ரெய்லர் எப்படி? | தினேஷ் vs ஹரிஷ் கல்யாண் மோதலும் கிரிக்கெட்டும்! | Attakathi Dinesh and Harish Kalyan starrer Lubber Pandhu Trailer - hindutamil.in

அடுத்ததாக வாராயோ வெண்ணிலாவே திரைப்படத்தில் தினேஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இளையராஜா யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பாடியுள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். அந்த படத்தை சசிதரன் இயக்கியுள்ளார். பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ஒரு கேங்ஸ்டர் படமான வெட்டுவம் திரைப்படத்தையும் தினேஷ் கைவசம் வைத்துள்ளார். இனிவரும் நாட்களில் அட்டகத்தி தினேஷ் அல்லது படங்கள் மூலமாக முன்னணி நடிகராக வலம் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அட்டகத்தி தினேஷின் லேட்டஸ்ட் மிரட்டல் லுக் புகைப்படங்கள்