எல்லா ஜீவராசிகளுக்கும் அத்தியாவசியமானது உணவு. தற்போது உலகத்தில் உள்ள அனைத்து உணவுகளும் எங்கு போனாலும் கிடைக்கும். ஆனால் இன்றைய சூழலில் அதிகமாக ஆதிக்கம் செலுத்துவது ஃபாஸ்ட் ஃபுட்டுகள் தான். திரும்பும் இடமெல்லாம் ஃபாஸ்ட் புட் கடைகள். இளைஞர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளும் அதுதான்.
பிரியாணியா அதைவிட உலகில் சிறந்த உணவு உண்டோ என்று பிரியாணிக்கு ஹைப் ஏத்தி வைத்திருக்கிறார்கள். அதேபோல் இரவு உணவு என்றாலே சூடான நான்கு பரோட்டாவை பிச்சு போட்டு சால்னாவை ஊற்றி குழப்பி அடிக்க வேண்டும். இப்படிதாண்டா வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என்று புது வாழ்க்கை நடைமுறையை சமீபத்திய வருடங்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இவை இரண்டு உணவுகளும் உடலுக்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?
இரவு உணவு என்பது மிகவும் முக்கியமானது. அது மிகவும் லைட்டாக சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய இளைஞர்கள் வாங்கி சாப்பிட விரும்புவது சிக்கன், மட்டன் பிரியாணி, காரசாரமான உணவு, பொறித்த உணவுகள் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இந்த மாதிரி உணவுகள் நம் உடல் நலனில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பிரியாணி சாப்பிடும் பொழுது அதில் அதிகப்படியான எண்ணெய், நெய், மசாலாக்கள் சேர்த்து இருப்பார்கள்.
இந்த பிரியாணி ஆனது ஹைஃபேட் ஹை கலோரி உணவு ஆகும். ஒரு பிரியாணி சாப்பிடுவதனால் 500 முதல் 700 கலோரிகள் வரை உடம்புக்கு கிடைக்கிறது. இரவு நேரத்தில் இதை சாப்பிடும் போது நமது செரிமான உறுப்புகள் மிகவும் பாதிப்படையும்.
பிரியாணிக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பி இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய ஒரு உணவு பரோட்டா. மனிதர்கள் சாப்பிட தகுதியற்றவை தீங்கு விளைபதில் முதல் இடத்தில் இருக்கும் ஒரு பொருள் மைதா. இந்த மைதாவினால் தயாரிக்கப்படும் உணவுகளில் ஒரு சதவீதம் கூட உடம்புக்கு சத்து கிடையாது. 100 சதவீதமுமே தீங்கு தான். ஆனால் அதை யாரும் பெரிசாக சட்டை பண்ணுவதே கிடையாது.
இரவு உணவுகள் இட்லி, தோசை, சிறுதானியங்கள் சாலடுகள் இந்த மாதிரி மிகவும் லைட்டாக கலோரிகள் குறைந்த உணவாக சாப்பிட வேண்டும். அதுவும் 7:00 மணிக்குள்ளே இரவு உணவே முடித்து விட வேண்டும். இப்போதைய சூழ்நிலை என்னவென்றால் சென்னையில் புது விதமாக நடுராத்திரி பிரியாணி எனவும் அதிகாலை 3 மணி பிரியாணி எனவும் சாப்பிடுவதற்கே நேரங்காலம் இல்லாமல் பண்ணி விட்டார்கள். இந்த பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிடுவதனால் அதீத உடல் பாதிப்புக்கு உள்ளாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த மாதிரி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது பேட் லிவர் எனப்படும் கல்லீரல் வீக்கம் மாரடைப்பு போன்ற பலவிதமான நோய்களுக்கு இது வழி வகுக்கும் என்று அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் இரவு உணவில் இதையெல்லாம் சாப்பிடுகிறீர்கள் ஆனால் கண்டிப்பாக அதை நிறுத்திவிட்டு சத்தான உணவுகளை சாப்பிட தொடங்குங்கள்.