‘எங்கம்மாவ கல்யாணம் பண்ணிய பிறகாவது எங்க அப்பா பெண்கள் விஷயத்தில் கண்ட்ரோலா இருந்திருக்கணும்’ – சாவித்ரி மகள் பகிர்ந்த தகவல்!

By vinoth on புரட்டாதி 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு இணையான நடிப்பாற்றலைக் கொண்டவர்  நடிகையர் திலகம் என அழைக்கப்பட்ட சாவித்ரி. ஆந்திராவைப் பூர்விகமாகக் கொண்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து புகழ்பெற்றார். புகழின் உச்சத்தில் இருந்தபோது சாவித்ரி, தன்னுடைய சக நடிகரான ஜெமினி கணேசனை அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தபோதும் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.

ஆனால் ஜெமினி கணேசன், சாவித்ரிக்கும் பின்னால் மீண்டும் காதலில் விழுந்ததால் அவரின் பிரிவு நடந்தது. இதற்கிடையில் படத் தயாரிப்பு மற்றும் இயக்கம் என பலதுறைகளில் சாவித்ரி கால்பதித்தார். ஆனால் நடிப்பு அளவுக்கு அவருக்கு மற்ற துறைகள் கைகொடுக்கவில்லை.

   

Gemini ganesan and Savithri

   

அதனால் தனது சொத்துகளை இழந்து கடைசி காலத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்தார். சாவித்ரியின் குடிப் பழக்கத்தால் பல உடல் உபாதைகளுக்கு ஆளாகி இறந்தார். இதனால் சாவித்ரியின் இந்த மரணத்துக்கு ஜெமினி கணேசன்தான் காரணம் என பலரும் இப்போது வரை பேசி வருகிறார்.

 

இந்நிலையில் சாவித்ரி ஜெமினி கணேசன் ஜோடியின் மகளான விஜய் சாமூண்டீஸ்வரி அவருடைய ஒரு நேர்காணலில் அவரது பெற்றோர் பற்றி பலரும் அறியாத தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் “என் அப்பா மேல் என் அம்மா மிகவும் அன்பாக பொசஸிவ்வாக இருந்தார். ஒருமுறை நாங்கள் சுற்றுலா சென்ற போது நாங்கள் எல்லாம் காலால் தண்ணீரை எத்தி எங்கள் அப்பா மீது தெளித்து விளையாடினோம். அதற்கே எங்க அம்மா திட்டினாங்க. அவ்ளோ காதல் எங்கப்பா மேல வச்சிருந்தாங்க.

vijaya chamundeeswari

மனிதர்கள் யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நிறைவு ஏற்படனும். எங்க அம்மாவ கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறமாவது எங்கப்பா பெண்கள் விஷயத்தில ஒழுங்கா இருந்துருக்கணும். ஆனா அவர் அப்படி இல்லாமல் வேற பெண்களை தேடி போனாரு. அத எங்க அம்மாவால ஏத்துக்கவே முடியல. அதனாலதான் அவர் மேல் கோபமாகி அவர சந்திக்கவே மறுத்தாங்க. குடிப்பழக்கத்துக்கு அடிமையானாங்க. எங்கப்பா செஞ்ச தப்பு எங்கம்மா விட்டுட்டு வேறு பெண்களை தேடி சென்றதுதான். இதை அவரே ஒத்துகிட்டாரு” எனப் பேசியுள்ளார்.