உண்மையை கண்டுபிடித்த மனோஜ்.. வீட்டை விட்டு வெளியே போக சொல்லும் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்..!

By Nanthini on செப்டம்பர் 27, 2024

Spread the love

சிறகடிக்க ஆசை சீரியல் நேற்றைய எபிசோடில் நடன பள்ளியில் தவறு நடப்பதை விஜயா அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் விஜயா தவறு நடப்பதை நேராக பார்த்து அவர்களை எதுவும் திட்டாமல் தனித்தனியாக பிரித்து ஆட வைக்கிறார். இனி யாரும் தனிமையில் டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ண கூடாது என் கண் முன்னே தான் எல்லாமே நடக்கணும் என்று விஜயா கூறிவிட்டு அங்கிருந்து செல்கிறார். பிறகு மனோஜ் பொன்னியம்மன் கோவிலுக்கு லெட்டர் எழுதும் மர்ம நபரை தேடி செல்கிறார். அப்போது ரோகினியை மிரட்டிக் கொண்டிருக்கும் அந்த நபர் சாமியார் வேஷத்தில் அங்கு வருகிறார். மனோஜிடம் கோவிலில் அன்னதானம் செய்யப் போகிறோம் காணிக்கை கொடுங்கள் என்று கேட்கிறார்.

   

பிறகு மனோஜ் பற்றி அனைத்து விஷயங்களையும் கூறி கல்யாணி உங்க வாழ்க்கையில் இருப்பதால் நீங்க பெரிய இடத்துக்கு வருவீங்க என்று கூறுகிறார். உடனே மனோஜ் அதிர்ச்சி அடையும் நிலையில் அந்த நபர் உங்க மனைவி கல்யாணி யோகம் கொண்டவங்க அதனால தான் அப்படி கூறினேன் என்று கூறிவிட்டு நீங்கள் சந்திக்க வந்த நபர் என்னிடம் ஒரு கடிதத்தை கொடுத்து விட்டு சென்றார் என்று அவரிடம் கொடுக்கிறார். அதில் நான் உன்னை நிம்மதியா இருக்க விடக்கூடாது என்பதற்காக தான் அப்படி கடிதம் எழுதினேன் என்னுடைய பெயர் ரஜினி படத்தின் பெயர் என்று குழு கொடுக்கிறார். பிறகு மனோஜ் சந்தேகப்பட்டு தனது தம்பி முத்துவின் புகைப்படத்தை அந்த சாமியாரிடம் காட்ட அந்த சாமியாரும் பழைய பகையை மனதில் வைத்துக் கொண்டு ஆமாம் இவன்தான் கடிதம் கொடுத்தது என்று கூறி முத்துவை சிக்க வைக்கிறார்.

   

 

உடனே கோபத்தில் வீட்டுக்கு வரும் மனோஜ் கத்தி கூச்சலிட்டு முத்து தான் எல்லாத்துக்கும் காரணம் என்ன அவன் கொல்ல பார்க்கிறான் நிம்மதியாய் இருக்க விட மாட்டிக்கிறான் என்று சண்டை போடுகிறார். அப்போது வீட்டில் இருக்கும் அனைவருமே முத்துக்கு சாதகமாக பேசுகின்றனர். விஜயா, அவனுக்கு எவ்வளவு கெட்ட எண்ணம் இருக்கு பெத்த அம்மாவே மாரடைப்பு வந்து செத்துப் போகணும்னு நினைக்கிறான். இனிமே நீங்க இந்த வீட்ல இருக்க வேணாம் ஃபர்ஸ்ட் கிளம்புங்க என்று கோபத்துடன் விஜயா கூற உடனே மீனா என்னோட கணவர் எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் தான் பேசுவார் எதுக்கு எங்கள வீட்டை விட்டு போக சொல்றீங்க என்று சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

author avatar
Nanthini