விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஏழு சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இப்போது பிக் பாஸ் சீசன் 8 தொடங்க உள்ளது. கடந்த சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

ஆனால் இந்த சீசனில் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை. சில தனிப்பட்ட காரணங்களால் கமல் ஹாசன் பிக் பாஸ் நிகழ்சியில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. நயன்தாரா, விஜய் சேதுபதி, சிம்பு, சரத்குமார் என பல பிரபலங்களின் பெயர்கள் தொகுப்பாளர் பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என புரமோ உடன் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த சீசனில் போட்டியாளராக யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.பிக் பாஸ் சீசன் 8-ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் கிட்டத்தட்ட உறுதியானதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் எட்டாவது சீசன் வருகிற அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்க சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.. பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
