பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து விவாகரத்து செய்த தமிழ் சினிமா பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா..?

By Nanthini on செப்டம்பர் 23, 2024

Spread the love

சினிமாவை பொறுத்தவரையில் பிரபலங்கள் பலரும் ஒரு சில படங்களில் நடித்த பிறகு காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கம்தான். ஆனால் பல நேரங்களில் அது விவாகரத்தில் முடிந்து விடுகிறது. சமீபத்தில் கூட ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் விவாகரத்து செய்து பிரிந்த தமிழ் சினிமா நட்சத்திரங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

கமல்ஹாசன்:

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் உலக நாயகன் கமல்ஹாசன் முதலில் வாணி கணபதியை திருமணம் செய்து கொண்டு பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன். சரிகாவுடன் சில காலம் வாழ்ந்த கமல்ஹாசன் அவரிடம் இருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்து கௌதமியுடன் சில காலம் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கமல்ஹாசன் தனது மகள்களுடன் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

 

அரவிந்த்சாமி:

அரவிந்த்சாமிக்கும் காயத்ரி ராமமூர்த்தி என்பவருக்கும் 1994 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இவர்கள் 2010 ஆம் ஆண்டு திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். அதன் பிறகு குழந்தைகளின் பொறுப்பை அரவிந்த் ஏற்றுக்கொண்டார். பின்னர் 2012 ஆம் ஆண்டு அபர்ணா முகர்ஜி என்பவரை அரவிந்த்சாமி திருமணம் செய்து கொண்டார்.

பிரகாஷ் ராஜ்:

பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதா குமாரி 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் 2009 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். பிறகு 2010 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடன இயக்குனர் போனிவர்மாவை திருமணம் செய்து கொண்டார்.

தனுஷ்:

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 18 வருட திருமண வாழ்க்கையை கருத்து வேறுபாடு காரணமாக 2022 ஆம் ஆண்டு முடித்துக் கொண்டனர். தற்போது இவர்களுடைய விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

 

பிரபுதேவா:

பிரபுதேவா மற்றும் ரம்லத் இருவரும் 1995 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இஸ்லாமிய பெண்ணான இவர் பிரபுதேவாவை மணக்க தன்னுடைய பெயரை லதா என மாற்றிக் கொண்டார். ஆனால் 2011 ஆம் ஆண்டு இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரித்து விட்டனர். சில வருடங்களுக்கு முன்பு தான் பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

சரத்குமார்:

சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி. 1984 ஆம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அடுத்த வருடமே ராதிகாவை சரத்குமார் திருமணம் செய்து கொண்டார்.

ரேவதி:

இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சுரேஷ் சந்திரமோகனுக்கும் ரேவதிக்கும் 1986 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவரும் 2013 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது வரை இருவருமே தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்கள்.

பார்த்திபன்:

நடிகர் பார்த்திபனும் சீதாவும் 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாள் காதலுக்கு பிறகு நட்சத்திர திருமணம் நடந்தது. ஆனால் 2002 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். திவாகரத்திற்கு பின்னர் இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஜிவி பிரகாஷ்:

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக பிரபலமாகியுள்ள ஜிவி பிரகாஷ் தன்னுடன் படித்த சைந்தவி என்பவரை 2013 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 11 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ஜி வி பிரகாஷ் -சைந்தவி இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக 2024 ஆம் ஆண்டு அறிவித்துள்ளனர்.

ஜெயம் ரவி:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சமீபத்தில் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.

author avatar
Nanthini