உலகத்தின் பேய் நகரம் எங்கு இருக்கிறது தெரியுமா…? அதன் வரலாறு என்ன…?

By admin on புரட்டாதி 15, 2024

Spread the love

பேய் என்றால் யாருக்குதான் பயம் இருக்காது. ஒரு சிலர் இருட்டை கண்டாலே பயப்படுவர். பாழடைந்த பங்களா, வினோத சத்தங்கள் ஆகியவை பேய் என்ற பிம்பத்தை நமக்குள் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் உலகத்திலேயே பேய் நகரம் என்று ஒரு இடமே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அதைப் பற்றி இனி காண்போம்.

   

துருக்கியில் மலைப்பகுதிக்கு அருகில் இருக்கும் பள்ளத்தாக்கு கொண்ட ஒரு இடம்தான் காய்கொயட். இந்த இடம் தான் தற்போது பேய் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நகரம் அழிவதற்கு முன்னால் பத்தாயிரம் மக்கள் இந்த இடத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

   

பெரும்பாலான மக்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். மற்றவர்கள் துருக்கி இஸ்லாமியர்கள். தாரசு மலை குன்றுகளில் வாழ்ந்து வந்த கிரேக்க ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் பல கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். கைவினைப் பொருட்கள் செய்வது செருப்பு தைப்பது போன்ற தொழில்களை கற்று வைத்திருந்தார்கள். அந்த மலைக்குன்றின் பள்ளத்தாக்கில் வசித்து வந்த துருக்கி இஸ்லாமியர்கள் விவசாயத்தையே தங்களது தொழிலாக செய்து வந்திருக்கின்றனர்.

 

இந்த ரெண்டு மதத்தை சார்ந்தவர்களும் தங்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ளமல் நட்பு உணர்வோடு பழகி வந்திருக்கிறார்கள். அப்படி ஒற்றுமையா இருந்த இடத்தில் தற்போது ஆள் நடமாட்டமே இல்லாமல் மயானம் போல் ஆகி இருக்கின்றது. அப்படி இந்த ரெண்டு மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையை புரட்டிப் போட்டது முதலாம் உலகப் போர் தான்.

முதலாம் உலகப் போரில் ஒட்டாமன் சாம்ராஜ்யம் தோல்வியடைந்து கிரேக்க அரசு வெற்றி பெற்றது. அப்பொழுது கிரேக்க அரசு இந்த காயகோட் ம்லைப்பகுதியை கேட்டு வாங்கிக் கொண்டது. அதனால் அங்கிருந்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அகதிகளாக இடம் மாற்றப்பட்டனர். கிறிஸ்தவர்கள் கிரேக்க நாட்டிற்கும் ஏற்கனவே கிரேக்க நாட்டில் வாழ்ந்த துருக்கி இஸ்லாமியர்கள் மீண்டும் துருக்கிக்கும் இடம் மாறினர். இதுதான் உலகத்தில் முதன் முதலாக நடந்த பாப்புலேஷன் எக்ஸ்சேஞ்ச் நிகழ்வு ஆகும்.

இப்படி 16 லட்சம் மக்கள் அகதிகளாக துருக்கியிலிருந்து கிரேக்கத்துக்கும் கிரேக்கத்திலிருந்து துருக்கிக்கும் இடம் மாற்றி குடியமர்த்தப்பட்டனர். இப்படி இந்த நிகழ்வில் தங்களது இடத்தை விட்டு மாறிப்போன காயகோட் சேர்ந்த மக்கள் திரும்பி வருவதாக நினைத்து சென்றார்கள். ஆனால் திரும்பி வரவே இல்லை. அதனால் இது பேய் நகரம் என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.