மிரட்டலான கம்பேக் கொடுத்த சிம்பு.. வெந்து தணிந்தது காடு படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா..?

By admin on புரட்டாதி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் சிம்புவின் சினிமா மார்க்கெட் சரிந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிம்பு நடித்தார்.

   

அதிலும் சிம்பு கௌதம் மேனன் கூட்டணியில் உருவான படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்த தணிந்தது காடு உள்ளிட்ட வெற்றி படங்களில் சிம்பு நடித்துள்ளார்.

   

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்,vendhu  thanindhathu kaadu first single kaalathukkum nee venum | Galatta

 

கடந்த 2022-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தை ஐசரி கே கணேஷ் தனது வேல்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்தார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ரிலீஸ் ஆகி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டது. தற்போது உலக அளவில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது தகவல் வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு படம் உலகளவில் 55 முதல் 60 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

வெந்து தணிந்தது காடு திரைவிமர்சனம்