இந்த 7 பழக்கம் உங்ககிட்ட இருக்கா…? கண்டிப்பா அதை மாத்துங்க… எச்சரிக்கும் மருத்துவர்கள்…

By Meena on செப்டம்பர் 15, 2024

Spread the love

இன்றைய உலகில் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுபவர்கள் அதிகம். ஏனென்றால் உலகம் ஃபாஸ்ட் ஃபுட் மயம் ஆகிவிட்டது தான் முழு முதல் காரணம். எங்கு திரும்பினாலும் பாஸ்போர்ட் கடைகள் ஆக்கிரமித்து இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் முன்னோரு காலம் போன்றல்லாமல் தற்போதை விளைவிக்கும் காய்கறிகள் பழங்கள் அரிசிகள் என அனைத்திலும் ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதுவே நம் உடலில் நச்சு தன்மையை ஏற்படுத்தும். இது மட்டுமில்லாமல் நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் கூட பல நோய்களுக்கு வழிவகுக்கும். அப்படி இன்று பெரும்பாலான மக்களுக்கு இருக்கக்கூடிய நீரழிவு, ரத்த அழுத்தம் ஆகிய நோய்களுக்கு முக்கிய காரணமாக கூறப்படும் இந்த ஏழு பழக்கங்களை இனி பார்ப்போம். இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

   

முதலாவது இதில் வருவது காலை உணவை ஸ்கிப் செய்வது ஆகும். வேலைக்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் பெரும்பாலானோர் காலை உணவை சாப்பிடாமலே சென்று விடுகின்றனர். இது பல நோய்களுக்கு வழிவகுக்குமாம். அதனால் இனி காலை உணவை தவறாமல் சாப்பிடுங்கள்.

   

இரண்டாவது சரியான தூக்கம் இன்மை. வேலைப்பளு காரணமாக இருக்கலாம், நண்பர்களுடன் வெளியே செல்வது, போன் லேப்டாப் என எதையாவது பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற காரணங்களால் சிலர் நேரம் கடந்து தூங்குவார்கள். ஒரு மனிதனுக்கு கட்டாயம் 8 மணி நேர தூக்கம் அவசியம். அந்த எட்டு மணி நேரம் தூக்கம் இல்லை என்றாலும் பல நோய்கள் ஏற்படுமாம்.

 

மூன்றாவதாக கூறப்படுவது அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது. தற்போது பேஷன் ட்ரெண்டிங் எனக் கூறிக்கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு தினமும் சாப்பிடுகிறார்கள். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கெட்டுப்போகாமல் இருக்க சேர்க்கும் ரசாயனங்கள் உடலுக்கு கேடு விளைவிப்பதாகும்.

நான்காவதாக கூறப்படுவது பெப்சி கொக்ககோலா போன்ற அதிக இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது ஆகும். இதனால் உடலுக்கு நிறைய தீங்கு ஏற்படுமாம். அதனால் இந்த குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், நுங்கு, மோர், கரும்புச்சாறு. பிரஷ்ஷான ப ஜூஸ்கள் போன்றவைகளை குடித்தால் நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஐந்தாவதாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு நீரழிவு ரத்த அழுத்தம் அதிகம் ஏற்படுமாம். ஐடியில் வேலை செய்பவர்கள் போன்று ஒரே இடத்தில் அமைந்து கொண்டு வேலை செய்தாலும் அவ்வபோது ஐந்து நிமிடம் நடை பயிற்சி செய்வது முக்கியமான ஒன்றாக கூறப்படுகிறது.

ஆறாவதாக கூறப்படும் காரணம் மன அழுத்தம். மன அழுத்தம் அதிகமாக இருந்தாலும் நீரழிவு போன்ற நோய்கள் ஏற்படுமாம். அதனால் மன அழுத்தம் உங்களுக்கு இருந்தால் யாரேனும் நெருக்கமானவர்களிடம் அதை பற்றி மனம் திறந்து பேசினால் சற்று மன அழுத்தம் குறைவதற்கு ஏதுவாக இருக்கும்.

ஏழாவதாக கூறப்படுவது உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. உங்களால் தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டாலும் குறைந்தது ஒரு அரை மணி நேரம் நடை பயிற்சியையாவது மேற்கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய ஏழு பழக்கங்கள் நீங்கள் வைத்திருந்தீர்களேயானால் உடனே அதை மாற்ற வேண்டும் இல்லையானால் இளம் வயதிலேயே நீரழிவு ரத்த அழுத்தம் போன்ற ஆயுசு முழுக்கும் வரக்கூடிய நோய்களால் பாதிக்கப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர்.