நிவின் பாலி மீது பொய் புகாரா…? சலசலப்பில் கேரள திரையுலகம்…

By admin on புரட்டாதி 7, 2024

Spread the love

சமீப காலமாக அனைவரும் மலையாள திரை உலகைப் பற்றியே பேசி வருகின்றனர். அதற்கு காரணம் ஹேமா கமிட்டி குழு மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் இருக்கிறது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது தான் காரணம். இதன் எதிரொலியாக மோகன்லால் உள்ளிட்ட பல நடிகர் சங்க உறுப்பினர்கள் ராஜினாமா செய்தனர். அது இந்த நிலைமையை மேலும் தீவிரமடைய செய்துள்ளது.

   

இந்நிலையில் இந்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே நடிகர் நிவின்பாலியின் மீதும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை ஒரு இளம் பெண் புகார் அளித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த நிவின்பாலி என் மீது தவறில்லை என்பதை நிரூபித்து காட்டுவேன் என்று கூறியிருந்தார். தற்போது நிவின் பாலியின் மீது புகார் கொடுத்த அந்த இளம் பெண்ணின் குற்றச்சாட்டு பொய்யானது என்ற பரபரப்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

   

இந்த இளம்பெண் கொடுத்த புகார் என்னவென்றால் நிவின் பாலி இன் தயாரிப்பாளர் ஒருவர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி என துபாய் அழைத்துச் சென்று நிவின் பாலி உட்பட ஐந்து பேர் தன்னை ஒரு அறையில் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறி பரபரப்பான புகார் ஒன்றை அளித்திருந்தார். இதன் அடிப்படையில் நிவின் பாலிவின் மீது வழக்குப்பதிந்த கேரளா எர்ணாகுளம் போலீசார் புகாரின் மீது தீவிர விசாரணை செய்து வந்தனர்.

 

இதற்கிடையில் நிவின் பாலி தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஆதாரம் அற்றது எனவும் நான் இதை சட்ட ரீதியாக கொண்டு சென்று நான் நிரபராதி நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் கூறியிருந்தார்.
இது சம்பந்தமாக கேரளா அரசு சிறப்பு புலனாய்வு பிரிவு கொண்டு நிவின் பாலியை விசாரணை நடத்த உள்ளதாக கூறி வந்த நிலையில் தற்போது போலீஸ் விசாரணையில் புகாரளித்த பெண் துபாயில் அறையில் தன்னை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்பட்ட அந்த நாளில் கொச்சியில் உள்ள விடுதியில் நிவின் பாலி படம் சம்பந்தமாக அங்கிருந்தது தெரியவந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் மலையாள சினிமாவின் இயக்குனர் மற்றும் நடிகர் வினித் ஸ்ரீனிவாசன் அந்தப் பெண் குற்றம் சாட்டப்பட்ட நாட்களில் நிவின் பாலி திரைப்பட வேலைகளாக என்னுடன் தான் கொச்சியில் தங்கி இருந்தார் என்றும் வாக்குமூலத்தை கொடுத்திருக்கிறார். இதன்மூலம் அந்தப் பெண் பொய்யான புகாரை நிவின்பாலி மீது கொடுத்திருக்கிறார் என்று கூறி கேரளா திரையுலகமே சலசலப்பில் இருந்து வருகிறது.