விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் என்றும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதிலும் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகின்றது.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பிரிவில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ஏராளமான பேருக்கு வெள்ளித் துறையில் பொறுப்புகள் கிடைத்துள்ளன.

இன்னும் சொல்லப்போனால் இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலமாக உள்ளது. அதன்படி கடந்த 2022 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 9 நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக ஸ்வேதா மோகன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளர்களாக அபிஜித், அருணா, பூஜா மற்றும் பிரியா ஜங்ஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் முதல் ரன்னர் அப் பட்டதை பிரியா ஜெர்ஷன் பெற்றார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரியா ஜெர்ஷன், ஒரு சில திரைப்படங்களில் மற்றும் ஆல்பம் பாடல்கள் பாடியிருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவர் வெளிநாட்டுக்குச் சென்ற இசைப் பயிற்சி எல்லாம் பெற்றுள்ளார்.

இவருக்கு சமீபத்தில் தான் நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு தனது காதலன் சார்லி ஜாய் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி பிரமாண்டமாக நடைபெற்றது.

இவர்களின் திருமண வரவேற்பு விழா கொச்சியில் நடைபெற்ற நிலையில் இதில் பல சூப்பர் சிங்கர் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர். புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

