தமிழ் சினிமாவில் சாமி படங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் ரோஜா தான். இவர்கள் இருவரும் தான் அதிகமான சாமி படங்களில் அம்மன் வேடம் போட்டு நடித்துள்ளனர். அப்படி கடந்த 2000 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பொட்டு அம்மன். இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து 90ஸ் கிட்ஸ்களை பயத்தில் நடுங்க வைத்தவர் தான் நடிகர் சுரேஷ் கிருஷ்ணா.

தன்னுடைய நடிப்பின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்திய சுரேஷ் கிருஷ்ணா வில்லன் சாமியாராக நடித்து பலரையும் பதற வைத்தார். பொதுவாகவே வில்லன்களை பார்த்தால் பலருக்கும் கோபம் வரும். ஆனால் இந்த வில்லனை பார்த்தால் மட்டும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடுநடுங்கி போவார்கள். அந்த அளவிற்கு உருவத்திலும் நடிப்பிலும் கொடூரத்தனத்தை காட்டியவர் தான் சுரேஷ் கிருஷ்ணா. மலையாளத்தில் மிகப்பெரிய நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.

இவர் சில தமிழ் சீரியல்களிலும் நடித்துள்ளார். பொட்டு அம்மன் திரைப்படத்தில் வித்தியாசமான உருவத்தில் நடித்திருந்த இவரின் உண்மை முகம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது அவருடைய உண்மையான முகம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ப முடியாமல் ஹீரோ லுக்கில் இருக்கும் இவரையா இப்படி கொடூரமா காட்டி இருந்தார்கள் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
