பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மட்ட பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக விஜய் படங்கள் ரிலீஸ் ஆகப்போகிறது என்றாலே இசை வெளியீட்டு விழா கண்டிப்பாக நடைபெறும். அதிலும் விஜய் செல்லும் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் காத்துக் கிடப்பார்கள். ஆனால் கோட் படத்தை பொருத்தவரை இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை.

கோட் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி போதிய அளவில் நேரம் இல்லாததால் தான் இசை வெளியீட்டு விழாவை நடத்தவில்லை என சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார். படம் ரிலீஸ் ஆக இன்னும் மூன்று நாட்களை உள்ள நிலையில் பிரமோஷன் பணிகளில் படகுழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மறுபுறம் டிக்கெட் முன்பதிவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோட் திரைப்படம் தமிழில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

இது தவிர தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து படத்தை திரையிட உள்ளார்கள். மற்ற மொழிகளை பொருத்தவரை தமிழ் நடிகர்களின் படங்களுக்கு பிரமோஷன் பணிகளில் ஈடுபட மாட்டார்கள். நேராகவே படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து வசூல் கணக்கில் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். இந்த முறை கோட் படத்தை ஹிந்தி மொழி பத்திரிகையாளர்களை வரவழைத்து படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணிகளில் படகுழுவினர் ஈடுபட்டுள்ளார்களாம். இதனால் ஹிந்தியிலும் விஜயின் கோட் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#image_title
