CINEMA
இந்த பாடலை எழுதி என்னை அவமானப்படுத்துகிறீர்களா என்று கேட்ட MGR… பதறிய கவிஞர் வாலி…
MGR தமிழ் சினிமாவின் மிகவும் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். அவர் படங்கள் என்றாலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். ஒரு தடவை என்ன 50 தடவைக்கு மேல் கூட அவர் படத்தை பார்க்கும் ரசிகர்கள் உண்டு. அவருக்கு இருந்ததெல்லாம் ரசிகர்கள் அல்ல பக்தர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களின் செல்வாக்கு படைத்தவராக இருந்தவர் MGR.
மக்களின் ஆதரவுடன் நடிகராக மட்டுமல்லாமல் தமிழக முதலமைச்சராகவும் இருந்தவர் MGR. மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து சிறப்பாக ஆட்சி நடத்தியவர். பெரும்பாலும் எம்ஜிஆரின் திரைப்படங்கள் ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாகவும் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் போன்றவற்றை கொண்ட வசனங்கள் இருக்கும்.
MGRக்கு ஏற்றார் போலவே தான் கவிஞர் கண்ணதாசன் அவர்களும் வாலி அவர்களும் பெரும்பாலான பாடல்களை எழுதுவார்கள். அவரது சிந்தனைகளை அவரது எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாகவே பாடல்கள் அமைந்திருக்கும். அப்படி ஒரு படத்தில் கவிஞர் வாலி பாடல் எழுதும் போது ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
MGR அவர்களின் சகோதரர் எம் ஜி சக்கரபாணி தயாரித்த திரைப்படம் அரசகட்டளை. இந்த திரைப்படம் சர்வாதிகார அரசரை எதிர்த்து மக்களை எழுப்புவதற்காக ஒரு இளைஞன் எழுச்சி பாடல்களை பாடி விழிப்புணர்வு கொடுப்பார். அப்படி மக்களின் வீரத்தை எழுச்சியடைய செய்ய கவிஞர் வாலி ஒரு பாடலை எழுதியிருப்பார். அதாவது ஆண்டவன் கட்டளை முன்னாலே உன் அரச கட்டளை என்னாகும் என்ற பாடலை எழுதியிருப்பார். இந்த பாடல் வரிகளை MGR ரிடம் காட்டினார் கவிஞர் வாலி.
உடனே பாடல் வரிகளை பார்த்த எம்.ஜி.ஆரின் முகம் மாறியது. அவர் கோபத்துடன் என்ன கவிஞரே என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். உடனே கவிஞர் பதற்றம் அடைந்து என்ன ஆயிற்று என்று கேட்கிறார். உடனே எம்ஜிஆர் நான் நடித்த படத்தின் பெயர் அரசகட்டளை இதற்கு முன்னால் தம்பி சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் ஆண்டவன் கட்டளை. நீங்க எழுதியிருக்கும் வரிகள் ஆண்டவன் கட்டளைக்கு முன்னாலே அரச கட்டளை என்னாகும் என்று எழுதி இருக்கிறீர்கள். இதன் அர்த்தம் தம்பி சிவாஜி கணேசன் படத்திற்கு முன்னால் என் படம் என்ன ஆகும் என்று கேட்பது போல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உடனே எம்ஜிஆரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பாடல் வரிகளை மாற்றிய வாலி அதோடு ஒரு படத்திற்கு பாடல் எழுதும்போது கதைக்கான சூழ்நிலைகளை பார்ப்பது மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையில் இருக்கும் சூழ்நிலைகளையும் ஒப்பிட்டு பார்த்து தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாராம் கவிஞர் வாலி.