நாகேஷை எச்சரித்த அதிகாரி… கண் கலங்கி அவர் செய்த செயல்…

By admin on புரட்டாதி 2, 2024

Spread the love

பழம்பெரும் நகைச்சுவை நடிகரான நாகேஷ் தாராபுரத்தில் பிறந்தவர். இந்திய ரயில்வேயில் எழுத்தாளராக பணிபுரிந்தவர். சிறுவயதிலேயே தராபரத்தில் இருந்து வெளியேறி தொழில் தேடி சென்னைக்கு குடிப்பெயர்ந்தார் நாகேஷ். இவரது அறை தோழர்கள்தான் எழுத்தாளர் வாலி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

   

நாடகங்களில் நடித்து வந்த நாகேஷ் பின்னர் 1958 ஆம் ஆண்டு மனமுள்ள மருதராம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.1961 ஆம் ஆண்டு தாயில்லா பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நாகேஷ் அனைவரின் பாராட்டையும் பெற்றார். தொடர்ந்து 1964ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார்.

   

1960 70களில் எம் ஜி ஆர் சிவாஜி கணேசன் போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்து பிரபலமானார். 1965 ஆம் ஆண்டு திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் உடன் தருமி கதாபாத்திரத்தில் தோன்றியதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார் நாகேஷ். தொடர்ந்து காதலிக்க நேரமில்லை, அன்பே வா, சாந்தி நிலையம், பட்டணத்தில் பூதம், வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் என தன் வாழ்வில் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நாகேஷ்.

 

தனது துரு துரு பேச்சினால் அனைவரையும் எளிதாக சிரிக்க வைக்கும் நாகேஷ் அவர்களின் வாழ்க்கையில் அவரை கலங்கும்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் அவர் பிஸியாக நடித்த காலகட்டத்தில் ஒரு போன் கால் வந்திருக்கிறது. அப்போது எதிர்மனையில் நான் சென்சார் வழங்கும் அதிகாரி பேசுகிறேன். உங்களை நான் நேரில் சந்திக்க வேண்டும் படப்பிடிப்பின் போது எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் நேரம் ஒதுக்குவீர்களா என்று கேட்டார். உடனே நாகேஷ் வாங்க உடனே சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

அவர் கார் வரும் வழியில் நின்றிருந்த சென்சார் அதிகாரி நாகேஷை பார்த்தவுடன் நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் என்று கூறிவிட்டு அடுத்த நிமிடமே கோபமடைந்து விட்டாராம். நீங்கள் பண்றது நல்லா இருக்கா வாய் கோணலான வைத்துக் கொண்டும் திக்கி திக்கி பேசி காட்டி நகைச்சுவை பண்ணி இருக்கீங்க. நம்ம நாட்டுல எத்தனை பேர் அந்த மாதிரி குறைபாடு ஓட இருக்காங்க. அப்ப நீங்க அவங்களை கிண்டல் பண்றீங்களா. ஒரு நகைச்சுவைங்கறது யார் மனசையும் துன்பப்படுத்தாமல் சிரிக்க வைக்கிற மாதிரி இருக்கணும் என்று செருப்பால் அடித்தால் போல் கேள்வி கேட்டிருக்கிறார். உடனே கண்கலங்கிய நாகேஷ் இனிமேல் நான் அப்படி நடிக்க மாட்டேன் என்று கூறி சத்தியம் செய்து இருக்கிறார். இந்த சம்பவம் அவரின் நகைச்சுவை பாணியையே மாற்றி இருக்கிறது.