தளபதி படத்தை கலாய்த்து விஜய் ரசிகர்களை வம்பு இழுத்த கார்த்தி.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி..!!

By admin on புரட்டாதி 2, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. பையா, சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் கார்த்தி நடித்துள்ளார். இவரது 27-ஆவது திரைப்படம் மெய்யழகன். இந்த திரைப்படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

   

மேலும் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் உள்ளிட்டோர் மெய்யழகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். செப்டம்பர் 27-ஆம் தேதி மெய்யழகன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

   

 

இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்திக் விஜய் படத்தை கலாய்த்து பேசினார். கடந்த 2023-ஆம் ஆண்டு தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்தார். இது மட்டுமில்லாமல் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷியாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

வாரிசு பணத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தில் ராஜு ஃபைட் வேணுமா? ஃபைட் இருக்கு. சாங் வேணுமா? சாங் இருக்கு. டான்ஸ் வேணுமா? டான்ஸ் இருக்கு என பேசி இருந்தார். இந்த நிலையில் மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, இந்த படத்தில் ஃபைட் வேணுமா பைட் கிடையாது. சாங் வேணுமா? சாங் கிடையாது என கூறி தில் ராஜு மற்றும் விஜய் படத்தை கலாய்த்து பேசியுள்ளார். கார்த்தியின் பேச்சால் விஜய் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.