பிரபல நடிகரான ஜீவா தித்திக்குதே, ராம், அரண், கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், சிங்கம்புலி, ரௌத்திரம், நண்பன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜீவா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த பிளாக் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தேனியில் இருக்கும் ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு ஜீவா வந்தார். அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து ஜீவாவை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் கேரளாவில் பூதாகரமாக வெடித்த ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஜீவா அது தப்பான விஷயம். அத பத்தி கேள்விப்பட்டேன். நடிகைகள் தங்களுக்கு நடந்ததை வெளிச்சம் போட்டு சொல்றாங்க. அதற்கு செய்தியாளர்கள் நீங்கள் நடிகர் என்பதால் தான் ஹேமா கமிட்டி குறித்து ஒரு கேள்வியை கேட்டோம் என மீண்டும் அதைப் பற்றிய பேசினர்.

அப்போது தமிழ் சினிமா துறையில் இப்படி நடக்கவில்லை. நான் ஒரு நடிகர். இந்த துணி கடையை திறந்து வைக்க வந்துள்ளேன். அனைவரது முகத்திலும் சிரிப்பு இருக்கிறது. இந்த சூழல் இப்படியே தொடர வேண்டும் என நினைக்கிறேன். நல்ல விஷயம் பண்ண வந்த இடத்தில் அபசகுணமாக கேள்வி கேட்கிறீர்கள். உங்களுக்கு அறிவு இருக்கா என செய்தியாளர் ஒருவரிடம் பேசி உள்ளார்.

இதனால் அந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் ஜீவாவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாடகி சின்மயி தமிழ் சினிமா துறையில் பாலியல் துன்புறுத்தல் இல்லை என்று எப்படி சொல்கிறார் என்பது எனக்கு புரியவில்லை என ஜீவா பேசிய வீடியோவை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயம் தான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.
I really do not understand how they are saying sexual harassment does not exist in Tamil Industry.
HOW?! https://t.co/sm9qReErs0
— Chinmayi Sripaada (@Chinmayi) September 1, 2024
