Connect with us

நான் படம் இயக்கினா இவர் தான் ஹீரோ… ஓபனாக பேசிய ஜெயம்ரவி…

CINEMA

நான் படம் இயக்கினா இவர் தான் ஹீரோ… ஓபனாக பேசிய ஜெயம்ரவி…

ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். இவர் பட தொகுப்பாளர் மோகன் அவர்களின் மகன் மற்றும் இயக்குனர் மோகன் ராஜா அவர்களின் சகோதரரும் ஆவார். தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்தின் மூலமாகவே பேரும் புகழும் அடைந்தார் ஜெயம் ரவி. இந்த படத்தின் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டார் ஜெயம் ரவி.

   

அடுத்ததாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பின்னர் கமர்சியல் படங்களான தாஸ், மழை போன்ற படங்களில் நடித்தார். சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் திரைப்படத்தின் மூலம் சாக்லேட் பாயாக நடித்து புகழ் பெற்றார் ஜெயம் ரவி.

   

அடுத்ததாக சந்தோஷ் சுப்பிரமணியம், தீபாவளி, தாம் தூம், பேராண்மை, தில்லாலங்கடி, எங்கேயும் காதல் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்று முன்னணி நடிகர்களுள் ஒருவரானார் ஜெயம் ரவி.

 

சமீபத்தில் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று இரண்டு ஆகிய திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரும் பாராட்டையும் பெற்றார் ஜெயம் ரவி. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து வரும் ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஜெயம் ரவி நீங்கள் படம் இயக்குவீர்களா? இயக்க ஆசை இருக்கிறதா? அப்படி இயக்கினால் யாரை ஹீரோவாக தேர்ந்தெடுப்பீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜெயம் ரவி நான் படம் இயக்குவனானு தெரியல. எனக்கு ஃபியூச்சர்ல அப்படி தோணுச்சுன்னா இயக்குவேன். அப்படியே நான் படம் இயக்குனா என் படத்தோட முதல் ஹீரோ விஜய் சேதுபதி தான். ஒரு நடிகனுக்கான எல்லா குணமும் அவர்கிட்ட இருக்கு. அவரோட வேலை செய்யணும்னு நான் ரொம்ப விருப்பப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.

More in CINEMA

To Top