நாங்க பிரிஞ்சு ஒரு வருஷம் ஆகுது… அதுக்கு இதுதான் காரணம்… எமோஷனலாக பேசிய கார்த்திக்…

By admin on ஆவணி 30, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் LGBTQ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் பலர் வெளியே வர தொடங்கியுள்ளனர். இந்த சமூகத்தில் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று போராடுகின்றனர். அந்த சமூகத்தைச் சேர்ந்த தன்பால் ஈர்ப்பாளர்களான கார்த்திக் மற்றும் கிருஷ்ணா எல்லாவற்றிற்கும் ஒரு படி மேல் போய் தமிழ்நாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோக்கள் இன்டர்வியூக்கள் போன்றவைகள் மிகப் பிரபலமாகி டிரெண்டிங் ஆனது.

   

தற்போது இதில் சோகம் என்னவென்றால் எந்த அளவுக்கு பிரபலமானார்களோ அதே வேகத்தில் தற்போது கார்த்திக் மற்றும் கிருஷ்ணா பிரிந்துள்ளனர். இந்த பிரிவுக்கான காரணம் என்ன என்பதை இந்த இந்த இருவரில் ஒருவரான கார்த்திக் என்பவர் வெளியே வந்து நேர்காணல்களை கொடுத்திருக்கிறார். இவர் சினிமாத்துறையில் சூட்டிங் மேக்கப் மேனாகவும், ஆர்டிஸ்ட் அசிஸ்டன்ட் ஆகவும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

   

ஒரு நேர்காணலில் கார்த்திக் கூறுகையில் நானும் கிருஷ்ணாவும் பிரேக்கப் செய்து ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் யாருக்குமே அதைப் பற்றி தெரியாது. இப்போதுதான் வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவன் என்னை ரொம்ப மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறான். எனக்கு அவனுடன் வாழ விருப்பமில்லை. எனக்கு உதவி செய்யவும் யாரும் இல்லை. அதனால் தான் வெளியில் வந்து பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று கூறியிருக்கிறார்.

 

அவர்களது பிரிவுக்கான காரணம் என்னவென்று கார்த்திக் கூறியிருப்பது என்னவென்றால் அவன் என்ன ரொம்ப செக்ஸுவல் அப்யூஸ் பண்ணுனா. ஒரு நாளைக்கு மூணு நாலு தடவைக்கு மேல இருக்கணும். நான் தூங்கும் போது பண்றது அந்த மாதிரி எல்லாம் பண்ணி என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணுனான். என்ன வேலைக்கு போகக்கூடாது எதுவும் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு இருந்தான். அது மட்டும் இல்லாம நான் வேலைக்கு வெளியே போன பிறகு நிறைய பேர் கூட பழக்கம் வச்சிட்டு அவங்க கூட எல்லாம் தப்பா இருக்க ஆரம்பிச்சுட்டான். அது எனக்கு சுத்தமா பிடிக்கல. ஒரு கட்டத்துக்கு மேல நாம தானே அன்பாக இருக்கோம் அவங்க சைடுல இருந்து எதுவுமே வரலையே அப்ப எதுக்காக நம்ம இருக்கணும் அப்படின்னு ரொம்ப டிப்ரசன்குள்ள போய் Suicide லாம் பண்ண முயற்சி பண்ணினேன். அப்புறம் ஒரு சில நண்பர்கள் தான் என்னை காப்பாற்றி இன்னைக்கு இந்த அளவுக்கு என்ன சரி பண்ணி வச்சிருக்காங்க என்று மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் கார்த்திக்.