வெற்றிமாறனின் ‘விடுதலை 2’ – ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..!

By Nanthini on ஆவணி 29, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் விடுதலை. இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தில் காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாக பேசப்பட்டிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

   

மேலும் தமிழை தாண்டி தெலுங்கிலும் இந்த திரைப்படம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று பட குழு அறிவித்த நிலையில் படத்திற்கு எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் முதல் பாகத்தில் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வெற்றிமாறன் வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து விடுதலைபடத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியார் மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராஜ் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

   

 

இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர் டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் விடுதலை 2 பாகம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது.