மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அளிப்பதாக புகார்கள் எழுந்தது. அவர்களது கஷ்டங்களை ஹேமா கமிட்டி அம்பலப்படுத்தியது. இதனால் மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் நடிகர் விஷால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, சினிமா வாய்ப்புகளுக்காக நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மெண்ட் கேட்பவர்களை உடனே செருப்பால் அடிங்க என கூறியுள்ளார். மேலும் ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது புகார் கொடுத்திருக்கிறாரே அது பற்றி கூறுங்கள் என பத்திரிகையாளர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்த விஷால் ஸ்ரீ ரெட்டி யாருன்னு எனக்கு தெரியாதுங்க. அவங்க பண்ண சேட்டைகள் தான் எனக்கு தெரியுமே தவிர அவங்க யாருன்னு எனக்கு தெரியாது. இவங்க இப்படி பண்ணாங்க, அவங்க அப்படி பண்ணாங்கன்னு சொல்றது தவறான செயல்லா இருக்கு. ஈசியா யார் மேல வேணாலும் குற்றம் சாட்டலாம். என்ன நடந்தது என்று உண்மை தெரியணும். நாங்கள் நடிகர் சங்கம். எங்க காதுக்கு பார்வைக்கு வந்தா அதற்கான நடவடிக்கை எடுப்போம். அதான் சொல்றேன் எவனாவது அட்ஜஸ்ட்மெண்ட் பத்தி பேசினா அவன செருப்பால அடிங்க.

அது தான் நான் சொல்றது. மேலோட்டமா தமிழ் திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் இருக்கா இல்லையான்னு நாம சொல்ல முடியாது. கண்டிப்பா இருக்கலாம். இல்லாம எப்படி இருக்கும்? காலம் காலமா தமிழ் சினிமாவில் குற்றச்சாட்டுகள் இருந்துட்டு தான் இருக்கு. நீங்க சுதாரிச்சு சூதானமா இருக்கணும். ஒருத்தன் கூப்பிடறானா அவன செருப்பை கழட்டி அடிக்கணும். அதுதான் நான் சொல்றேன். என்ன பயன்படுத்த கூடாது அப்படிங்கிற தைரியம் சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு வரணும்.

உப்புமா கம்பெனிக்காரங்க வேணும்னே விளம்பரம் எடுக்கிறேன்னு ஒரு பொண்ண கூப்பிட்டு போட்டோ சூட் எடுக்கிறேன்னு பயன்படுத்திட்டு அதுக்கப்புறம் டோட்டலா எஸ்கேப் ஆயிட்டாங்க. இந்த மாதிரி நிறைய உப்புமா கம்பெனிகள் தமிழ் சினிமாவில் இருக்கு. அத நான் ஒத்துக்குறேன். அந்த சூழ்நிலைல நாங்க என்ன போலீசா? அந்த இடத்துல நாங்க எப்படி இருக்க முடியும். சங்கமா செயல்படும்போது சங்கத்தில் இந்த மாதிரி வந்து அட்ஜஸ்ட்மென்ட் பத்தி கூப்பிடுறாங்க அப்படின்னு வந்து சொன்னா அதுக்கான நடவடிக்கையை கண்டிப்பா எடுப்போம். சும்மா இருக்க மாட்டோம் என விஷால் பேசி உள்ளார்.

