தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் சிவாஜி என்ற துருவங்கள் ஆட்சி செய்துகொண்டிருந்த நேரத்தில் சைலண்ட்டாக இவர்கள் இருவருக்கும் இணையாக வெற்றி படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் ஜெமினி கணேசன். எம் ஜி ஆர் ஆக்ஷன் மற்றும் புராண படங்களில் நடித்தால், சிவாஜி கணேசன் எமோஷனலான குடும்பக் கதைகளில் நடித்து வந்தார். இவற்றுக்கிடையே ஜெமினி கணேசன் மென்மையானக் காதல் கதைகளில் நடித்தார். அதனால்தான் அவர் காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜெமினி கணேசன் ஈகோ பார்க்காமல் பிற நடிகர்களின் படங்களில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படி அவர் சிவாஜியோடு இணைந்து 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் எம் ஜி ஆரோடு ஒரே ஒரு படமான முகராசியில் மட்டுமே இணைந்து நடித்தார்.
பல சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு ஜெமினி கணேசன்தான் முதல் சாய்ஸ். அப்போது சிறுபட்ஜெட்டில் படம் எடுத்துக் கொண்டிருந்த முக்தா சீனிவாசன் ஜெமினி கணேசனை வைத்து எடுத்த படம் ஒன்றுக்கு அப்போது பிரபலமாக இருந்த சோ’வை திரைக்கதை வசனம் எழுதவைத்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் சோவின் வசனங்களைப் பார்த்த ஜெமினி கணேசன் ‘இதல்லாம் என்னய்யா வசனம்’ என்று கூறி திரைக்கதைப் பேப்பர்களை தூக்கியெறிந்துள்ளார். அதனால் கடுப்பான சோ, அவரோடு சண்டை போட சென்றுள்ளார். ஆனால் தயாரிப்பாளர்களோ “இப்பொது நீ சண்டை போட்டால் படம் பாதிக்கும். லட்சக்கணக்கில் நஷ்டம் ஆகும்” எனக் கூறியுள்ளார்.
தன் கோபத்தால் தயாரிப்பாளர் பாதிக்கக் கூடாது என நினைத்த சோ அமைதியாக இருந்துள்ளார். ஆனால் சோ மீதான பாசத்துக்காக அதன் பிறகு ஜெமினி கணேசனை தங்களுடைய எந்தபடத்திலும் முக்தா சீனிவாசன் கமிட் செய்யவே இல்லையாம். அந்தளவுக்கு அவர்கள் சோ மீது மரியாதை வைத்திருந்தார்களாம். இதை சோ தன்னுடைய கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார்.
