மாமன்னன் படம் அப்பாக்காக எடுத்ததுன்னா, வாழை படம் இவங்களுக்காக எடுத்ததாம்.. சுவாரஸ்யத்தை பகிர்ந்த மாரியின் ஹீரோயின்..!!

By admin on ஆவணி 25, 2024

Spread the love

முன்னணி இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த 23-ஆம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மனம் வருடும் மெலடி: மாரி செல்வராஜின் 'வாழை' முதல் சிங்கிள் எப்படி? | mari selvaraj directorial vaazhai movie first single Thenkizhakku released - hindutamil.in

   

திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழை திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். வாழை திரைப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வாழை திரைப்படத்தை பார்த்து இயக்குனர் பாலா, சூரி ஆகியோர் சொல்ல வார்த்தைகள் இல்லாமல் மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து தங்களது பாராட்டை தெரிவித்து சென்றனர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான மாமன்னன் படம் சூப்பர் ஹிட் ஆனது.

   

 

தனது அப்பாவுக்காக தான் மாமன்னன் படத்தை எடுத்ததாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார். இந்த நிலையில் மாரி செல்வராஜின் மனைவி வாழை படம் பற்றி கூறியதாவது, எல்லாருமே இந்த படத்துல அவங்களுக்கான நெருக்கத்தை பத்தி சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா எனக்கு இந்த படம் கூடுதலான ஒரு நெருக்கமான விஷயம். ஏன்னா நானும் மாரியும் காதலிக்க ஆரம்பிச்ச இந்த 14 வருடத்தில் மாரி ரொம்ப சொல்லி வருத்தப்பட்டு வாழ்ந்த இந்த வலி நிறைந்த வாழ்க்கை இந்த வாழை படம் தான்.

இந்த படத்தை நான் பார்க்கும்போது நான் மிஸ் பண்ண மாரியோட சின்ன வயசு நியாபகங்களை எனக்காகவே ரீ கிரியேட் பண்ண மாதிரி பார்த்துகிட்டு இருக்கேன். மாரி சின்ன வயசுல இப்படித்தான் இருந்திருப்பாருன்னு யோசிக்கிறேன். ஒரு காதலன் ஒரு காதலிக்கு பரிசா கொடுத்த அவனோட வலியையும், வாழ்வையும் கொடுத்ததா நான் இந்த படத்தை பாக்குறேன் என கூறியுள்ளார்.