பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழ்க்கை திரைப்படம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் கூறியதாவது இந்த படம் தியேட்டருக்கு வருமா வராதா என்று நாங்கள் எதுவுமே முதலில் பிளான் பண்ணல. சும்மா கதையை மட்டும் எடுத்து வைத்தோம்.

படம் பார்த்த சிலர் தியேட்டருக்கு கொண்டு வாங்க கண்டிப்பா மக்கள் கொண்டாடுவாங்க அப்படின்னு சொல்லுவாங்க. என்னோட டைரக்டர் ராம் சார் எல்லாரும் சொன்னாங்க. நான் நினைச்ச மாதிரி, எல்லாரும் சொன்ன மாதிரி ஒரு உண்மையான கதையை தியேட்டர்ல பார்க்கும்போது மக்கள் எவ்வளவு கொண்டாடுகிறார்கள் என்பது புரிஞ்சது. சின்ன கதை, பெரிய கதை, பெரிய ஹீரோ அதெல்லாம் பார்க்காமல் கதை ரொம்ப உண்மையா, நேர்மையாய் இருந்துச்சுன்னா மக்கள் கொண்டாட தயாரா இருப்பாங்க அப்படிங்கிறதுக்கு உதாரணமாக வாழை படம் அமைந்திருக்கு.

பரியேறும் பெருமாள் படம் ரிலீஸ் ஆன 10 நாள் கழிச்சு பாலா சார் எனக்கு கால் பண்ணி அவரோட ஆபீஸ்க்கு கூப்பிட்டாரு. இதுவரைக்கும் நான் எந்த பேட்டிலையும் இத சொன்னது கிடையாது. நான் அவரை பார்க்க போயிருந்தேன். அவர் பேசிட்டு இருந்தாரு. திடீர்னு எனக்கு 5 பவுன் செயின் போட்டார். அந்த ரூம்ல யாருமே இல்ல. நானும் அவரும் மட்டும் தான் இருந்தோம். எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு. நான் கேட்ட போது எனக்கு தோணுச்சு நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு. எங்கேயாவது பார்த்தா பேசுவாரு.

அதே மாதிரி தான் வாழை படத்தை பார்க்க நான் ரொம்ப நாளா அவர்கிட்ட கேட்டுட்டு இருந்தேன். அதுக்கப்புறம் அவரு ஒரு டேட் கொடுத்து பார்த்தாரு. அது இயல்பா நடந்ததுதான். அந்த முத்தம் அந்த மௌனத்துக்கு அப்புறம் நாங்க பேசிக்கல. எனக்கும் அவருக்கும் நல்ல தெரியும் அந்த முத்தத்திற்கும், மௌனத்துக்கும் இடையில நிறைய வார்த்தைகள் இருக்கு. பரியேறும் பெருமாள் படம் ரிலீஸ் ஆன பிறகு நிறைய விஷயம் பேசி இருக்கோம். அது எல்லாத்தையும் நான் இது கூட சேர்த்து வச்சு கனெக்ட் பண்ணிகிட்டேன் என கூறியுள்ளார்.

