விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ராஜா ராணி சீரியல் இரண்டாவது பாகத்தில் நிஹாரிகா நடித்தார்.

முதன்முதலாக மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் விகாரிக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். இவர் வம்சம், வேலைக்காரன், வித்யா நம்பர் ஒன் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் ஏராளமான படங்களிலும் நிஹாரிகா நடித்துள்ளார்.

இயக்குனர் ராஜித் என்பவரை நிஹாரிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிஹாரிகா தன் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்த நிலையில் நிஹாரிக்காவுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

நிஹாரிகா குழந்தையின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நார்மல் டெலிவரி. உங்களது அன்பை கொடுத்து எங்களுக்கு சப்போர்ட் பண்ணிய அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
View this post on Instagram
