Connect with us

கிருஷ்ண ஜெயந்தி 2024… மறக்காம இந்த பலகாரத்தை குட்டி கிருஷ்ணருக்காக பூஜையில் வைங்க…

ASTROLOGY

கிருஷ்ண ஜெயந்தி 2024… மறக்காம இந்த பலகாரத்தை குட்டி கிருஷ்ணருக்காக பூஜையில் வைங்க…

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான கிருஷ்ண அவதாரம் அவதரித்த தினம் மற்றும் கிருஷ்ணர் பிறந்த தினத்தை தான் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரம்தான் கிருஷ்ண அவதாரம் ஆகும். இந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, ஜென்மாஷ்டமி என்ற பெயரில் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று குழந்தை கிருஷ்ணர் புகைப்படம் அல்லது சிலைகளை வைத்து வழிபட்டால் நம் வீட்டிற்கு நேரடியாக கிருஷ்ணரே வந்து அருள் புரிவதாக ஐதீகம். குழந்தை வரம் வேண்டுபவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபட்டால் அந்த கிருஷ்ணரே கூடிய விரைவில் குழந்தையாக வந்து பிறப்பார் என்பது ஐதீகம். இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்தி ஆனது திங்கட்கிழமை 26 ஆகஸ்ட் அன்று நிகழ்கிறது. காலை நேரத்தை விட மாலை நேரத்தில் கிருஷ்ணருக்கு பூஜை செய்து வழிபடுவது சிறந்ததாகும்.

   

   

இன்றைய தினம் மாலை வேலையில் அரிசி மாவில் கிருஷ்ணர் பாதத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை வரைந்து கிருஷ்ணர் வீட்டிற்கு வருவதாக நினைத்துக் கொண்டு குழந்தை கிருஷ்ணருக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அந்த பண்ட பலகாரங்கள் அனைத்தையும் நெய்வேத்தியம் செய்து வழிபடுவது முக்கியமானதாகும்.

 

குழந்தை கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான வெண்ணெய், சர்க்கரை, அவல், முறுக்கு, சீடை, அதிரசம், தேன்குழல், பால், தயிர், இனிப்புகள் போன்றவற்றை கண்டிப்பாக நெய்வேத்தியம் செய்ய வேண்டும். கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த பண்டம் என்றால் அது அவல் தான். அதனால் அவலினால் செய்யப்பட்ட பாயசத்தை பூஜையில் வைப்பது கிருஷ்ணரின் அருள் முழுமையாக கிடைக்கும். அன்றைய தினம் கிருஷ்ண நாமத்தை ஜெபித்து மனம் உருகி வேண்டினால் நாம் நினைத்ததெல்லாம் நடக்கும், திருமணம் கைகூடும் மற்றும் குழந்தை வரம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

More in ASTROLOGY

To Top