எனக்கு Re- entry கிடைச்சது இந்தப் படத்தில தான்… கடைசி நேரத்துல இவங்க இல்லனா அது நடந்திருக்காது… எமோஷனலாக பேசிய ஐஸ்வர்யா பாஸ்கரன்…

By admin on ஆவணி 18, 2024

Spread the love

நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் பழம்பெரும் மூத்த நடிகை ஆன நடிகை லட்சுமி மற்றும் பாஸ்கரனுக்கு பிறந்தவர். இவரின் இயற்பெயர் சாந்தா மீனா என்பதாகும். ஐஸ்வர்யா பாஸ்கரன் தமிழ் சினிமா மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இது தவிர மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துள்ள நடிகை ஆவார்.

1991 ஆம் ஆண்டு ஒலி அம்புகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஐஸ்வர்யா பாஸ்கரன். பின்னர் 1992 ஆம் ஆண்டு பாக்யராஜுடன் ராசுகுட்டி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின்னர் பட்டர்ஃபிளைஸ், திருடா திருடா, நான் புடிச்ச மாப்பிள்ளை, மீரா, கிழக்கு வெளுத்தாச்சு போன்ற திரைப்படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா பாஸ்கரன்.

   

1993 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் எஜமான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் ஐஸ்வர்யா பாஸ்கரன். அதைத்தொடர்ந்து மக்களாட்சி, ஹவுஸ் ஃபுல், சுயம்வரம், பெண்ணின் மனதை தொட்டு போன்ற படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா பாஸ்கரன்.

   

இவர் திரைத்துறையில் நுழைந்த உடனே இவர் பிரபல நடிகையாக வருவார் என்று அனைவரும் கூறினர். ஆனால் 1996 ஆம் ஆண்டு அன்வீர் ரஹ்மத் என்பவரை திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார் ஐஸ்வர்யா பாஸ்கரன். எனினும் 1996 ஆம் ஆண்டு கணவரை விவகாரத்து செய்து அன்றிலிருந்து இருந்து இன்று வரை தனியாக தான் வாழ்ந்து வருகிறார் ஐஸ்வர்யா பாஸ்கரன். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா பாஸ்கரன், திருமணத்திற்கு பிறகு தனது சினிமா வாழ்க்கை எந்த அளவுக்கு தடுமாற்றம் ஆனது. அதற்குப் பிறகு சினிமாவில் தனது ரீ என்ட்ரி பற்றியும் பேசியுள்ளார். அவர் கூறியது என்னவென்றால் சினிமால என்னோட கரியர் ரொம்ப நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. லவ் பண்ணி கல்யாணம்னு ஒன்னு பண்ணுனேன், அதுல என்னோட கரியர் டோட்டலா க்ளோஸ் ஆயிடுச்சு.

அப்புறம் அந்த கல்யாண வாழ்க்கையும் நீடிக்கல. ரெண்டே வருஷத்துல விவாகரத்து ஆயிடுச்சு. அதுக்கு பிறகு என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிக்கிட்டே இருந்தேன். ஒரு நல்ல ஒரு திரைப்படம், கதைக்களம் கிடைச்சதுனா சினிமாவுல கம்பேக் கொடுத்து நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டுட்டு இருந்தேன். அப்போதான் 1999 இல் சுயம்வரம் படத்தை உலக சாதனைக்காக உருவாக்கினார்கள்.

13 இயக்குனர்கள் 15 யூனிட்டுக்கு மேல 24 மணி நேரத்துக்குள்ள எல்லா நடிகர்களையும் நடிக்க வச்சு வேர்ல்ட் ரெக்கார்ட், லிம்கா புக் ஆப் ரெக்கார்டுல இடம் பிடிக்கணும்னு எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க. நாளைக்கு திங்கட்கிழமை சூட்டிங்னா ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆர்ட்டிஸ்ட் படத்திலிருந்து விலகிட்டாங்க. அப்போ அந்த இடத்துக்கு பிரபுவுக்கு ஜோடியா எனக்கு ஆஃபர் வந்துச்சு. எனக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. எனக்கு ஒரு நல்ல ரீ- என்ட்ரிக்காக ஒரு கதை கிடைச்சுச்சு அப்படின்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா அதுல ஒரு பிரச்சனை இருந்துச்சு.

அது என்னன்னா ஞாயிற்றுக்கிழமை எனக்கு கன்ஃபார்ம் பண்றாங்க. மறுநாள் திங்கட்கிழமை சூட்டிங். எனக்கு முன்னாடி இருந்த ஆர்டிஸ்ட் ஏற்கனவே காஸ்ட்யூம் எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க. ஆனா அவங்க படத்துல இருந்து விலகிட்டாங்க. அவங்களோட சைஸ் என்னோட சைஸ் ரெண்டுமே வேற வேற. மறுநாள் ஷூட்டிங் தொடங்கி ஆகணும். அப்போ வனிதா விஜயகுமார் தான் இயக்குனருக்கு அசோசியேட்டா வொர்க் பண்ணிட்டு இருந்தாங்க. அந்த ஞாயிற்றுக்கிழமை நைட் ஓவர் நைட்டுக்குள்ள என்னோட சைஸ்க்கு ஏத்த டிரஸ் எல்லாமே அவங்க தான் ரெடி பண்ணினாங்க. அவங்க இல்லன்னா நான் அந்த படத்துல நடிச்சிருக்கறது சாத்தியமே இல்ல. அவங்களால தான் ஒரு நல்ல கதைல நான் ரீ என்ட்ரி கொடுத்து, அதனால எனக்கு நல்ல பெயர் கிடைச்சது என்று பகிந்துள்ளார் ஐஸ்வர்யா பாஸ்கரன்.