தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பழம்பெரும் பெறும் நடிகர் தான் சிவகுமார். இவரின் இயற்பெயர் பழனிச்சாமி என்பதாகும். சிவகுமார் கோவையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் தந்தை தான் நடிகர் சிவகுமார்.
சிவகுமார் 1965 ஆம் ஆண்டு காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அடுத்ததாக சரஸ்வதி சபதம் திரைப்படத்தில் நடித்தார். இவரது இளம் வயது தோற்றம் மற்றும் முகம் அப்படியே முருகப்பெருமானின் கதாபாத்திரத்திற்கு வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தியது.

அதனால் 1967ஆம் ஆண்டு கந்தன் கருணை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார் சிவகுமார். முருக கடவுள் வேடம் என்றால் அது சிவகுமார் தான் என்ற அளவுக்கு பெயர் பெற்றார். அடுத்ததாக தொடர்ந்து பக்தி திரைப்படங்களில் நடித்தார் சிவக்குமார்.
அதைத்தொடர்ந்து உயர்ந்த மனிதன், அன்னக்கிளி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்துபைரவி, வண்டிச்சக்கரம், இன்று நீ நாளை நான், பாசப்பறவைகள், வெள்ளிக்கிழமை விரதம், உன்னை நான் சந்தித்தேன், மனிதனுக்கு மறுபக்கம் போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார் சிவக்குமார்.
முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை கதாபாத்திரத்திலும் நடித்தவர் சிவகுமார். தமிழில் கிட்டத்தட்ட 190 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் சிவக்குமார். தனது நடிப்பிற்காக மூன்று தென் இந்திய பிலிம் ஃபேர் விருதுகள், இரண்டு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை வென்றுள்ளார் சிவகுமார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பணியாற்றியவர் சிவகுமார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமார் தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் கூறியது என்னவென்றால், நான் சூட்டிங் சூட்டிங்னு ரொம்ப பிசியா இருந்தேன். பிள்ளைகளை கூட கவனிக்க மாட்டேன். அப்பெல்லாம் என் மனைவி தான் என் குடும்பத்தை கட்டுக்கோப்பாகவும் என் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்குனாங்க. என் வாழ்க்கையில என் மனைவி எனக்கு கிடைச்சது கடவுள் போட்ட பிச்சை என்று உருக்கமாக பகிர்ந்துள்ளார் சிவகுமார்.
