குக்கூ பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள்..!

By Nanthini on ஆவணி 17, 2024

Spread the love

சினிமாவில் வெளிவந்த எத்தனையோ படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தாலும் சில படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும். அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் குக்கூ. இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க மாளவிகா நாயர் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

   

 

   

இதில் நிஜமான குருடியாக நடித்து நமது கண்களை விழித்து ரசிக்க வைத்தவர் தான் மாளவிகா நாயர். டெல்லியை சேர்ந்த இவர் படித்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான். படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டார். அதன் பிறகு இவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார்.

 

பின்னர் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தமிழில் குக்கூ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் இந்த படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை என்ற விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

இந்தப் படத்திற்குப் பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. பிறகு கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அதன்படி தற்போது அவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.