விஜய் நடிப்பில் உருவாகி அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தான் தி கோட். வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை அர்ச்சனா கல்பாத்தியின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா மற்றும் லைலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

கடந்த 14ஆம் தேதி பட குழு தரப்பில் இருந்து ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் அதில் கோட் படத்தில் நடித்துள்ள விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா மற்றும் மைக் மோகன் உள்ளிட்டோர் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு கோட் திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

விஜய் சினிமா துறையில் இருந்து விரைவில் விலக உள்ளதால் இந்த படத்தின் ஒவ்வொரு அறிவிப்பின் மீதும் ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்ற நிலையில் கோட் படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு ரசிகர்களை காலை முதல் குஷிப்படுத்தி வந்தது. தற்போது கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
