பிரபல இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான டிமான்டி காலனி 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது இந்த படத்தில் அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டு டிமான்டி காலனி முதல் பாகம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது.

இந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்தார். இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரித்தது. ஸ்ரீநிதி ஷெட்டி, ஜார்ஜ், பத்மப்ரியா, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். எதிர்பார்த்த அளவு படம் வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் விக்ரம் படத்திற்காக நான் தயாரிப்பாளரிடம் ஒரு கதையை சொன்னேன். அந்த கதை அவருக்கு பிடிக்கவில்லை. இதனால் ஒரு எழுத்தாளருடன் இணைந்து வேறு ஒரு கதை உருவாக்கி அதை தயாரிப்பாளரிடம் சொன்னேன். அதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை.

இதனையடுத்து அந்த தயாரிப்பாளர் ஒரு கதையின் சுருக்கத்தை என்னிடம் கூறி அதனை உருவாக்க சொன்னார். அதற்கு ஸ்க்ரீன் பிளே எழுதிய போதும் அந்த கதையில் எனக்கு விருப்பமே இல்லை. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. எனது உதவி இயக்குனர்களுக்கு அந்த கதை பிடித்திருந்தது. இதனால் வேறு வழியே இல்லாமல் அந்த படத்தை உருவாக்கினேன். இது போன்ற ஒரு காரணங்களால் கோபுர திரைப்படத்திற்கு எதிர்மறை விமர்சனங்கள் வெளியானது. படம் தோல்வியடைந்தது என அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.

