சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இப்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பல முன்னணி இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்க முன் வருகின்றனர். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அதற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் அமரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அமரன் திரைப்படத்தில் மிரட்டலான நடிப்பை சிவகார்த்திகேயன் வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் அமரன் திரைப்படம் முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ் ஆகி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்திற்கு 120 கோடி ரூபாய் பட்ஜெட் ஆகியுள்ளதாம். Sony 24 கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். அது மட்டும் இல்லாமல் காஷ்மீர் பகுதியில் படபிடிப்பு நடந்த போது இதற்கு ஏன் இவ்வளவு செலவு செய்கிறீர்கள்? என ஒவ்வொன்றிற்கும் சோனி டீமை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்த நிலையில் அமரன் திரைப்படத்தை பார்த்த கமல்ஹாசன் தனது நிறுவனம் மூலமாகவே நேரடியாக படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார். சோனி கொடுத்த 24 கோடி ரூபாய், 12 கோடி ரூபாய் ப்ராஃபிட் என மொத்தம் 36 கோடி ரூபாய் பணத்தை கமல்ஹாசன் திருப்பி கொடுத்துவிட்டார். அமரன் திரைப்படம் மக்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இதனால் படத்தை தனது சொந்த நிறுவனம் மூலமாகவே ரிலீஸ் செய்ய கமல்ஹாசன் முடிவெடுத்து விட்டதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

