கூல் சுரேஷ்னு கூப்பிடாதீங்க.. அடுத்த தடவை இப்படி கூப்பிடுங்க.. ஆங்கரிடம் அலப்பறை செய்த கூல் சுரேஷ்..!!

By admin on ஆவணி 11, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சத்யராஜ் நடிப்பில் தோழர் சேகுவேரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் விசிக தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வி.சி.க தலைவர் திருமாவளவன் தான் தொகுத்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி மேடையில் கூல் சுரேஷ் பேசியிருந்தார். முன்னதாக நிகழ்ச்சி தொகுப்பாளனி எத்தனையோ படங்களின் முதல் நாள் முதல் காட்சியில் பார்த்திருக்கிறோம். அப்படி படத்தில் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததும் இவர் என்ன சொல்வார் என படக் குழுவே காத்திருக்கும் என அழைத்தார்.

   

 

உடனே மேடைக்கு வந்த கூல் சுரேஷ் தொகுப்பாளனிடம் உங்களது பெயர் என்ன என கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பிறகு நீங்கள் கூல் சுரேஷ் அவர்கள் பேசுவார்கள் என சாதாரணமாக கூப்பிட்டீர்கள். அடுத்த முறை கூப்பிடும்போது யூடியூப் ஸ்டார், வெள்ளிக்கிழமை நாயகன், சிஎஸ்கே கட்சியின் தலைவர், கூல் சுரேஷ் கட்சியின் தலைவர், நடிகருமாகிய கூல் சுரேஷ் அவர்களை பேச அழைக்கிறோம் என சொல்லி கூப்பிடுங்கள். மேடையில் பெரிய பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுடன் எனக்கு இதற்கு முன்னர் அறிமுகம் கிடையாது. இந்த நேரத்தில் அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனென்றால் பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதற்காக கூறினேன். மேலும் கூல் சுரேஷ் கட்சி என மீண்டும் இங்கே கூறுகிறேன். ஏனென்றால் வருகிற 2026-ல் தொல் திருமாவளவன் அய்யாவுடன் நான் கூட்டணி வைக்கலாம். அண்ணன் வேல்முருகன் அவர்களுடன் கூட்டணி வைக்கலாம். முத்தரசன் அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என மேடையில் வைத்து பேசி சுரேஷ் அலப்பறையை கிளப்பி உள்ளார்.