தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சத்யராஜ் அலெக்ஸ் ஏடி இயக்கத்தில் உருவான தோழர் சேகுவேரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சத்யராஜ் விசிக தலைவர் தொல் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் கூறியதாவது, நான் இதுவரைக்கும் 250-க்கு மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கேன். எல்லா படத்துல நடிக்கும் போது நான் சந்தோஷமா தான் இருப்பேன். ரிலீஸ் ஆகும் போது வெற்றியான சந்தோஷமா இருப்பேன். தோல்வி அடைந்தா கொஞ்சம் வருத்தமா இருப்பேன். ஆனா ஒரு சில படங்களில் நடிக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும். அப்படி என்ன பெருமைப்படுத்திய கதாபாத்திரம் தந்தை பெரியாராக நான் இந்த படத்துல நடிச்சது தான். இது மட்டும் இல்லாம ஒரு சில தலைவர்களின் பெயரில் நடிச்சது என்ன ரொம்பவே பெருமைப்படுத்தியது.

ஏற்கனவே புரட்சிக்காரன் படத்தில் சேகுவேரா போல கெட்டப் போட்டு நடிச்சேன். இந்த டைம் சேகுவேரா படத்துல நடிச்சிருக்கேன். வேலைக்காரி, பராசக்தி என அப்போதிலிருந்து சென்சார் பிரச்சனை வரத்தான் செய்யும். நான் வேதம் புதிது படத்துல நடிச்சேன். அந்த பட ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு போராட்டம் பண்ணாங்க. அப்போ எம்ஜிஆர் தான் தலைவரா இருந்தார். அவர் படத்தை பார்த்துட்டு இந்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க எந்த பிரச்சனை வந்தாலும் நான் பாத்துக்குறேன்னு சொன்னாரு. இந்த மாதிரி நிறைய சிக்கல்களை நான் பார்த்து இருக்கேன். அந்த அனுபவம் எனக்கு இருக்கு. விநியோகஸ்தர்கள் படம் குறித்து பயப்பட வேண்டாம்.

சென்சார் குழு படத்துல இருந்து ஒரு சில வசனங்களை மாற்ற சொன்னாங்க. அதை மாற்றி சான்றிதழ் வாங்கியாச்சு. இதனால் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் ஆகும். அதுல எந்த சந்தேகமும் வேண்டாம். ஒரு சில வசனங்கள் மாற்றப்பட்டாலும் படம் பார்க்கும்போது ரசிகர்களுக்கு அது புரிஞ்சிடும். உதயசூரியனின் பார்வையிலே என எம்ஜிஆர் பாடியதை புதிய சூரியனின் பார்வையிலே என மாற்ற சொன்னார்கள். ஆனால் ரசிகர்கள் அதை உதயசூரியனின் பார்வையிலே இன்று தான் இன்னைக்கு வரைக்கும் எடுத்துக்கிட்டாங்க. தோழர் சேகுவாரே படமும் தடைகளைத் தாண்டி ரிலீஸ் ஆகி தோழர்களை சென்றடையும் என சத்யராஜ் கூறியுள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

