உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. வாட்ஸ் அப்பில் பகிரப்படும் படங்கள் மற்றும் வீடியோக்களை இனி ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்ய முடியாது என்ற புதிய அம்சத்தை தற்போது வெளியிடுகிறது.

- அதாவது ஒருவர் உங்களுடைய போனில் உள்ள whatsapp சாட்டை இனி ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயற்சிக்கும்போது அது பலன் அளிக்காமல் போகும். ஏனென்றால் இனி வரும் காலங்களில் whatsapp ஸ்கிரீன் ஷாட் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நாம் விரும்பும் ஒரு பயனருக்கு படம் அல்லது வீடியோவை ஒரு முறை திறந்து பார்க்கும் போது அதனை ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது.
- சில நேரங்களில் Disappearing மெசேஜ்கள் இருந்தால் அதை நீங்கள் தாராளமாக ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் கொள்ளலாம்.
- அதேசமயம் whatsapp ப்ரொபைலுக்கு போடும் புகைப்படங்களையும் இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது.
- வழக்கம் போல படங்களையும் வீடியோக்களையும் ஒரு முறை பார்க்கவோ, அப்லோடு செய்யவோ அல்லது சேமிக்கவும் முடியாது. இந்த புது அப்டேட்டுகள் பயணர்களின் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
