மனிதனை மிஞ்சும் சாமர்த்தியம்.. ஒரு post-க்கு 12 லட்சம் அசால்ட்டாக சம்பாதிக்கும் பூனை..!

By Nanthini on ஆவணி 10, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளம் என்பது பொழுது போக்காக மட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்கும் தளமாகவும் மாறி உள்ளது. பலரும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக புதுவிதமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். தங்கள் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.

   

இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலமாக பணம் சம்பாதிப்பவர்கள் மனிதர்கள் மட்டுமல்லாமல் சில விலங்குகளும் தற்போது அந்த வேலையை தொடங்கியுள்ளது. அதன்படி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 12 கோடி ரூபாய் சம்பாதித்து 84 மில்லியன் பவுண்டுகள் அதாவது 852 கோடி உடன் உலகின் பணக்கார மிருகமாக பூனை ஒன்று மாறி உள்ளது. இந்த பூனையின் பெயர் நளா. விலங்குகள் காப்பகத்தில் இருந்த இந்த பூனையை கடந்த 2012 ஆம் ஆண்டு பூக்கி என்ற நபர் ஒருவர் வாங்கி வளர்த்துள்ளார்.

   

 

அதன் பிறகு அவர் பூனை செய்யும் சேட்டைகள் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர ஆரம்பித்தார். இந்த பூனையின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 4.5 மில்லியனுக்கும் அதிகமான பின் தொடர்பவர்கள் இருக்கிறார்கள். இந்த பூனையின் கணக்கில் 7267 பதிவுகளும் உள்ளது. அந்த பூனையிடம் மொத்தமாக 84 மில்லியன் நிகர மதிப்பு உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது அதிகம் பின்தொடர்பவர்களை கொண்ட பூனைக்கான கின்னஸ் உலக சாதனையையும் பெற்றுள்ளது.