MGR படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தும் மறுத்த பஞ்சு அருணாசலம்… அதுக்குக் காரணம் கண்ணதாசனா?

By vinoth on ஆவணி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் 50 களில் இருந்து 77 வரை தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் என பலதுறைகளில் வித்தகராக இருந்தவர் எம் ஜி ஆர். அதனால்தான் அரசியலுக்கு வந்தபோதும் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வராக இருந்தார்.

ஆனால் எம் ஜி ஆருக்கு இந்த வெற்றிகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. அவர் சினிமாவில் 1930 களிலேயே அறிமுகமாகிவிட்டாலும் 50 களின் தொடக்கத்தில்தான் அவரால் ஒரு கதாநாயகனாக் நிலைபெற முடிந்தது. அதுவரை துண்டு துக்கடா வேடத்தில்தான் நடித்து வந்தார்.

   

நாடக உலகில் இருந்து வந்ததால் எம் ஜி ஆருக்கு சினிமாத்துறையின் பல பிரிவுகளிலும் அறிவு இருந்தது. அவரே சில படங்களை இயக்கி தன்னை வெற்றிகரமான இயக்குனராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். அதே போல பாடல்களுக்கான ட்யூன்களை வாங்குவதிலும் பாடல் வரிகளை அதற்கேற்ப வாங்குவதிலும் எம் ஜி ஆருக்கு அபாரமான அறிவு இருந்ததாக அவரோடு பணியாற்றியவர்கள் சொல்வார்கள்.

   

அதனால்தான் அவர் படத்தில் பாடல்கள் அவரது இமேஜை உயர்த்தப் பலவகைகளில் பயன்பட்டன. அவருக்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் மற்றும் வாலி போன்றவர்கள் முத்து முத்தான பாடல்களை எழுதியுள்ளனர். இதில் ஒரு கட்டத்தில் கண்ணதாசனோடு அரசியல் ரீதியாக எம் ஜி ஆருக்கு கருத்து வேறுபாடு வந்து பிரிந்தார். இதனால் எம் ஜி ஆர் படங்களுக்கு பாடல் எழுதமாட்டேன் என்று கண்ணதாசன் பிடிவாதமாக இருந்துள்ளார்.

 

அப்போதுதான் 1965 ஆம் ஆண்டு உருவான கலங்கரை விளக்கம் என்ற படத்துக்கு கண்ணதாசனிடம் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலத்தை எழுத வைக்கலாம் என எம் ஜி ஆர் சொல்லியுள்ளார். ஆனால் தன் சித்தப்பாவான கண்ணதாசனுக்கும் எம் ஜி ஆருக்கும் பிரச்சனை இருக்கும் போது எப்படி நாம் அவர் படத்துக்கு பாடல் எழுதுவது என அந்த வாய்ப்பைத் தவிர்த்துவிட்டாராம் பஞ்சு அருணாசலம்.

இதையறிந்த கண்ணதாசன் பஞ்சு அருணாசலத்திடம்” ஏன்டா எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் தான பிரச்சனை அதுல உனக்கு என்ன? அவர் படத்துக்கு பாடல் எழுதுவது எவ்வளவு நல்ல வாய்ப்பு தெரியுமா?  நல்ல பேரு கிடைக்கும் போய் எழுதிட்டு வா” என சொல்லி அனுப்பியுள்ளார். அப்படி பஞ்சு எழுதிய பாடல்கள்தான் என்னை மறந்ததேன் மற்றும் பொன்னொழில் பூத்தது ஆகிய பாடல்கள்.