தமிழ் திரையுலகில் ரொம்ப சங்கர் நடிகராகவும் காமெடி நடிகராகவும் வலம் வருகிறார். முதன் முதலில் மேடை நாடகங்கள் மூலம் திரையுலகில் தங்கள் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த முயற்சிகளால் திரையுலகில் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படத்தில் இந்திரஜா பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இந்த படம் இந்திரஜாவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. முன்னதாக ஒரு சில நிகழ்ச்சிகளிலும் இந்திரஜா பங்கேற்றுள்ளார். கடந்த மார்ச் மாதம் தனது தாய் மாமாவான கார்த்திக்யை இந்திரஜா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய நிகழ்ச்சிகளை ரொம்ப சங்கர் கோலாகலமாக நடத்தினார். அந்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. திருமணத்திற்கு பிறகு கார்த்திக் இந்திரஜா தம்பதியினர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியின் நடுவரான ராதா எப்போது மகிழ்ச்சி செய்தியை எங்களுக்கு சொல்ல போகிறீர்கள் என கேட்டார்.

உடனே இந்திரஜாவின் கணவர் கார்த்திக் நாங்கள் இருவரும் தாய் தந்தையாக போகிறோம் எனக் கூறி தனது மனைவி இந்திரஜா கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். உடனே நிகழ்ச்சியில் இருக்கும் அனைவரும் இந்திரஜா கார்த்திக் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கு வந்த ரோபோ சங்கர் இங்கு இருப்பதிலேயே நான் தான் மிகவும் யங் தாத்தா என கூறி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
View this post on Instagram
