தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

வருகிற 15-ஆம் தேதி தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. நேற்று தங்கலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ரஞ்சித் பேசியதாவது சார்பட்டா படத்துக்கு பிறகு நாம் சேர்ந்து படம் பண்ணலாம் என விக்ரம் சொன்னார். சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்கிற கலைஞன் அவர்தான். கலையை நேசிக்கிற ஒரு கலைஞனுடன் சேர்ந்து வேலை பார்ப்பது ஈஸியான விஷயம் கிடையாது.

விக்ரம் என் கதையை கேட்டு ஓகே சொன்னதுக்கு அப்புறம் தான் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய சவால் ஆரம்பித்தது. முதல் நாள் ஷூட்டிங்கிலேயே நான் எதிர்பார்த்த தங்கலானாக வந்து நின்றார். நான் கதை சொல்லும் போது ரொம்ப வீக்கு. அவர் என்ன புரிஞ்சுகிட்டது பெரிய விஷயம். என்னோட ஆள் மனசுல இருந்து என்னை புரிஞ்சுகிட்டு கதையை ஓகே பண்ணிட்டாரு. சில காட்சிகளை ரீசூட் செய்யணும்னு நான் சொல்லும் போதும் தயங்காமல் விக்ரம் சம்மதித்தார்.

ஒரு சில காட்சிகளை இப்படி பண்ணலாமா ரஞ்சித் அப்படின்னு என்கிட்ட கேட்டார். ஆனால் நான் வேண்டாம் சார் நான் எதிர்பார்க்கிற மாதிரி தான் தங்கலான் இருக்கணும் அப்படின்னு சொல்லிடுவேன். அதுக்கும் அவர் ஒன்னும் சொல்ல மாட்டாரு. விக்ரம் சாரா தேர்ந்தெடுத்ததற்கு அப்புறம் மற்ற நடிகர்கள் பத்தி யோசிக்கும்போது முதல்ல என் ஞாபகத்துக்கு வந்தது பசுபதி தான். அவர மாதிரி ஒரு மனிதரை பார்க்கவே முடியாது என பேசியுள்ளார்.

