தமிழ் சினிமாவில் முதலில் ஆதித்யா என்கிற ஹிப் ஹாப் தமிழா மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் ஆத்மிகா. கோயம்புத்தூரை சேர்ந்தவர் இவர் எம் பி ஏ படிக்கும் பொழுது ராஜீவ் மேனன் என்பவரின் இயக்கத்தில் சிறிய குறும்படத்தில் அவ்வப்போது நடித்து வந்தார். அதன் பிறகு ஹிப் ஹாப் தமிழாவிற்கு ஜோடியாக மீசைய முறுக்கு திரைப்படத்தில் அறிமுகமானார் .

மேலும் அதனைத் தொடர்ந்து காட்டேரி படத்தில் நடித்துள்ளார் . பிறகு உதயநிதி ஸ்டாலின் உடன் தயாரிப்பில் வெளியான கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார். தற்பொழுது திரைக்கு வராமல் இருக்கும் நரகாசுரன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஆத்மீகா 200 மக்களுக்கு ஆடி பெருக்கன்று கோவிலில் அன்னதானமும் வழங்கியுள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுவிட்டு உடல் அளவிளும் மனதளவிலும் நிம்மதியாக இருப்பதற்கு இல்லாதவர்களுக்கு உதவுவதே சிறந்த வழியாகும் அதிலும் அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பானது .

இது என் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் நம்மால் என்ன முடியுமோ அதனை பிறருக்கு செய்து உதவ வேண்டும் என்றும் ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவ வேண்டும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
