அட அப்படியா… விஜய் தன்னோட பிரியமான காரை விக்க போறாரா… அதுவும் எவ்வளவு தெரியுமா…?

By Keerthana on ஆவணி 2, 2024

Spread the love

தளபதி விஜயின் பிரியமான ரோல்ஸ் ராயல்ஸ் காரை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  இன்ஸ்டா வலைதளத்தில் ரோல்ஸ் ராய்ஸ்காரை விதவிதமாக போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளனர். நடிகர் விஜய் 2012 ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து இக்காரை வாங்கியுள்ளார் அதன் பெயர் ரோல்ஸ் ராயல்ஸ் கோஸ்ட் ஆகும்.

இந்த காரை பதிவு செய்வதற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றபோது அந்தக் காருக்கு நுழைவு வரி செலுத்தும் படி வணிகவரித்துறையினர் உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏன் வரிகட்ட வேண்டும் என்று கேட்டார் விஜய்? அதற்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் காருக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டால் தான் வாகனத்தை பதிவு செய்ய முடியும் என்றார்.

   

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார். சென்னை உச்சநீதிமன்றத்தில் பிறகு வழக்கு தொடர்ந்தது, அவர் வழக்கு தொடர காரணம் காரின் விலையை விட இறக்குமதி வரி, சாலை வரி மற்றும் பல வரிகளால் தொகை அதிகமாக இருந்தது எனக் கூறியுள்ளார்.

   

இதனால் இந்த மனுவை விசாரித்த நீதிபதியும்,மனுதாரர் புகழ்பெற்ற நடிகர் என்பதால் உரிய நேரத்தில் சரியான வரி செலுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வரி விலக்கு தடை கேட்டதற்காக முதல்வரின் கொரோனா நிறுவனத்திற்கு நிதியாக நடிகர் விஜய் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் கட்டசொன்னார்.

 

பிறகு வரி கட்டுவதற்கான உத்தரவும் பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது இவர் காரை விற்க முடிவு செய்துள்ளார். இந்த வழக்கு 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவிலும் செய்திகளிலும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. நடிகர் விஜய் வாங்கிய கார் 3.5 கோடியாகும், ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் இந்த கார் சீரியஸ் ஒன் வகையைச்சார்ந்தது.

இந்த கார் லிட்டருக்கு ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர் வரை மைலேஜ் கொடுக்கக் கூடியது, இதன் அதிகபட்ச வேகம் 250 கிலோ மீட்டராகவும் இந்த கார் இயக்குனர் சங்கர், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ,நடிகர் விஜய் மற்றும் தனுஷ் ஆகியோர் வைத்திருக்கிறார்கள். அவர் இந்த காரை ஆசை ஆசையாக வாங்கியிருந்தாலும் அவருக்கு மினி கூப்பர், இன்னோவா, பிஎம்டபிள்யூ என பல கார்களை வைத்திருக்கிறார்.

ஆனால் அவருக்கு இந்த கார் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. இந்தக் காரை இஎம்பிஐஆர்இ ஆட்டோஸ் என்னும் பிரீமியம் கார் டீலர் ஷாப்பில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரை பல ஆங்கில் போட்டோக்களை எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளன . இந்த காரின் தற்போதைய விலை இரண்டு புள்ளி ஆறு கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று குறிப்பிடத்தக்கது.